மகாசேன என்னும் மன்னன் (கி.பி. 276-303) இந்த ஜேத்தவனாராமய என்னும் விகாரையைக் கட்டுவித்தான். மகாசேன மன்னன் மகாயான பௌத்த தர்மத்தைப் பின்பற்றியவராவார்.  ஜேத்தவனாராமய விகாரையில் அமைந்துள்ள மிக விசாலமான தூபிகள் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த விகாரை அமைந்திருக்கும் பிரதேசம் ஆரம்ப காலத்தில் நந்தன வனத்திற்கு உரித்தானதாக இருந்ததாக வரலாறுகளில் கூறப்படுகின்றன. அங்கு மகிந்த தேரர் அவர்கள் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் தர்ம போதனை செய்ததாகக் கூறப்படுகின்றது. சங்காராம ஆச்சிரமங்களுக்கு உரித்தான சகல அம்சங்களும் பொருந்திய கட்டிடமாக அமைந்துள்ள இதன் நிர்மாணப் பணிகள், மகாசேன மன்னனின் ஆட்சிக் காலத்தில் மாத்திரமன்றி, கித்சிரிமெவன் மன்னன் (கி.பி. 303-331) ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னர் ஆட்சி செய்த மன்னர்கள் காலத்திலும் இடம் பெற்றுள்ளன.

jethawanaramaya-stupa

ஜேத்தவனாராமயின் மிகவும் விரும்பத்தக்க இடங்கள்

×

jethawanaramaya-stupaஜேத்தவன தூபி

மகாசேன மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட ஜேத்தவன தூபி 400 அடி உயரமானது. உலகில் உள்ள அனைத்து மிகப் பெரிய தூபிகளிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள தூபியாகவும், செங்கற்களால் நிர்மாணிக்கப்பட்ட மிக உயரமான தூபியாகவும் அமைந்துள்ளது. புத்த பகவான் போதித்த போதனைகள் அடங்கிய மகாயான சூத்திரத்தில் மிக முக்கியமான சூத்திர வாசகங்கள் உள்ள பிரக்ஞாபாரமிதா என்னும் சூத்திரம் எழுதப்பட்ட ஒன்பது ஏட்டுச் சுவடிகள் அண்மையில் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. தூபியின் நான்கு பக்கங்களிலும் செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட நான்கு வாயிற்கடவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தூபி நிலமட்டத்திலிருந்து சற்று உயரமான மாடம் அமைக்கப்பட்டு அதன் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புராதன காலத்தில் இந்த மாடத்தைச் சுற்றி வர யானைச் சிற்ப வரிகள் இருந்ததற்கான சான்றுகள் அகழ்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு வகையான நாணயங்கள், சீன மட்பாண்டங்கள் போன்ற விசேடமான தொல்பொருளியல் சான்றுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது மத்திய கலாசார நிதியத்தினால் இந்தத் தூபியின் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

×

சிலைக்கூடம்

ஜேத்தவன விகாரையில் காணக்கூடிய மிகச் சிறந்த கட்டிடக்கலையம்சங்கள் பொருந்திய அற்புதமான பகுதி சிலைக்கூடமாகும். இதனை 'மணிமெவ்லா பிராசாதய' எனவும் அழைக்கின்றனர். இச் சிலைக்கூடத்தின் வாயிலில் 27 அடி உயரமான கருங்கல்லால் நிர்மாணிக்கப்பட்ட கதவுநிலை அமைந்துள்ளது. அநுராதபுரம் மற்றும் பொலொன்னறுவையில் காணப்படுகின்ற சிலைக்கூடங்களில் இதுவே மிகப் பெரிய சிலைக்கூடம் எனக் கருதப்படுகின்றது. கர்ப்பக்கிருகத்தினுள் காணப்படும் பத்மாசனம் எனப்படும் மலர்கள் பூஜிக்கும் ஆசனத்தை நோக்குகையில் இதன் மீது மிக விசாலமான புத்தர் சிலை அமைந்திருக்கலாமென ஊகிக்கப்படுகின்றது. அச்சிலை அண்ணளவாக 37 அடி உயரத்தில் இருந்திருக்கலாமென கணிப்பிட்டுக் கூறியுள்ளனர். பத்மாசனத்தின் கீழே காணப்படும் இயந்திரக்கல்லில் இதற்கான சான்றுகள் தென்படுகின்றன. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் சேன மன்னன் (கி.பி. 833-853) இந்தச் சிலைக்கூடத்தை நிர்மாணித்ததாகவும், அவன் இங்கு தங்கத்தினாலான புத்தர் சிலையைப் பிரதிஷ;டை செய்திருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.