திருகோணமலை
per person
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம் மரபுரிமைகள் நிறைந்ததும், ஆரம்ப வரலாற்றுக் காலகட்டம் முதல் வாழ்ந்த மனிதர்களின் சான்றுகள் நிறைந்ததுமான பிரதேசமாகக் கருதப்படுகின்றது. இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்திலிருந்து அந்நியர் ஆட்சிக் காலம் வரை வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. சமவெளிப் பிரதேசமாகக் காணப்படுகின்ற இந்த மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள கற்குகைகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்தமைக்கான பல சான்றுகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசேடமாக இங்கு அமைந்துள்ள இயற்கையான துறைமுகம், சேருவில பிரதேசத்தில் இயற்கையாக அமைந்துள்ள செம்புச் சுரங்கம் போன்ற விடயங்கள் காரணமாக திருகோணமலை மாவட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரதேசமாக விளங்குகின்றது. கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியினுள் சேருவில பிரதேசத்தில் இருந்த செம்புச் சுரங்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் செம்பு வர்த்தக ரீதியாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பாவனையில் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்பு அகழ்ந்தெடுக்கப்பட்ட இடங்கள், அவற்றை உருக்குகின்ற இடங்கள், உருக்குவதற்காகப் பயன்படுத்தும் அடுப்புகள் என்பன தொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் திருகோணமலை இயற்கைத் துறைமுகம் தவிர்ந்த கடந்த காலங்களில் பாவனையில் இருந்த ஏனைய பல சிறு துறைமுகங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. திருகோணமலைத் துறைமுகம் புராதன காலத்தில் கோகண்ண துறைமுகம் என அழைக்கப்பட்டதாகவும், இலங்கையிலேயே உள்ள மிகப் பெரிய இயற்கைத் துறைமுகம் எனவும் பிரசித்தி பெற்று இருந்தது. புராதன காலந்தொட்டு மேலைத்தேய மற்றும் கீழைத்தேய நாடுகளை இணைக்கும் வர்த்தகத் தொடர்பு மையமாகவும் விளங்கிய இத்துறைமுகம் சுற்றிவர மலைகளால் சூழப்பட்ட ஒரு வளைகுடா போன்று அமைந்திருப்பதனால், சீரற்ற காலநிலைகள் காரணமாக கப்பல்களுக்குச் சேதமேற்படாதவாறு காப்பதற்கான ஒரு சிறந்த பாதுகாப்புப் பிரதேசமாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்து மகா சமுத்திரத்தில் மிகவும் பாதுகாப்பாகவும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சிறந்த துறைமுகமாகவும் விளங்குவதாக மேலை நாட்டவர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆகையால் துறைமுகம் சார்ந்த பிரதேசத்தில் தமது கோட்டைகளை நிறுவினார்கள். தற்போது எஞ்சியுள்ள பிரெட்றிக் கோட்டையை ஒல்லாந்தர் நிர்மாணித்துள்ளதாகவும், கடந்த காலம் தொடங்கி இன்று வரை மிகவும் பாதுகாப்பானதொரு கோட்டையாக இது விளங்குகின்றது. விசேடமாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலந் தொடங்கி செயற்பாட்டில் இருந்த கிழக்கு மாகாண பிரதான பாதை திருகோணமலையில் இந்த துறைமுகத்தில் முடிவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் பௌத்த, இந்து மத கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒரு முக்கிய பிரதேசமாகவும் திருகோணமலை விளங்குகின்றது.
திருகோணமலை நகரமானது, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய அந்நியர் ஆட்சிக் காலங்களில் அவர்களது ஆதிக்கத்தின் கீழ் இயங்கியுள்ளது. பிரெட்றிக் கோட்டை போன்ற விடயங்கள் இவற்றை உறுதிப்படுத்தும் சான்றுகளாகும்.
மத்திய கலாசார நிதியத்தினால் 2016 ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தினுள் அமைந்திருக்கும் மரபுரிமை இடங்கள் தொடர்பான முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், நீண்ட காலமாக அங்கு யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு, அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் அவற்றை மக்கள் கண்டுகளிப்பதற்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்பதே இந்த கருத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதுடன், இலங்கையிலுள்ள பௌத்த மத மரபுரிமைகள் மாத்திரமன்றி இந்து மத மரபுரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியதற்கான செயற்றிட்டங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருகோணமலையில் மிகவும் கவர்ச்சிகரமான இடங்கள்
பிரெட்றிக் கோட்டை
இந்த பிரெட்றிக் கோட்டை, திருகோணமலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகத்தின் பாதுகாப்புக் கருதி அமைக்கப்பட்டுள்ளதுடன், இத்துறைமுகத்திற்கு உட்செல்லும் நுழைவாயிலாகவும் அமைந்துள்ளது. அத்துடன் ‘டச் பே’ மற்றும் ‘பெக் பே’ என அழைக்கப்படுகின்ற பழைய துறைமுகப் பிரதேசங்களின் பாதுகாப்புக் கருதியும் இக் கோட்டை அமைந்துள்ளது. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர் இந்தக் கோட்டையை நிர்மாணித்தனர் எனவும், அவர்கள் அதனை ‘பகோடா ஹில்லின் (தூபி மலையின்) எலீசா கோட்டை’ என அழைத்ததாகவும், போர்த்துக்கேயர்களின் யுத்த மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் வரலாறுகளில் கூறப்படுகின்றது. 1639 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றியுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
ண்டிய இராச்சிய மன்னனாகிய இரண்டாம் ராஜசிங்க மன்னன் போர்த்துக்கேயர்களைத் தோற்கடிப்பதற்காக ஒல்லாந்தர்களின் உதவியை நாடினார் எனவும், பின்னர் ஒல்லாந்தரின் ஆதிக்கத்தின் கீழ் இந்த கோட்டை நிர்வகிக்கப்பட்டு வந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. 1795 ஆம் ஆண்டு வரை ஒல்லாந்தர்கள் இந்தக் கோட்டையினுள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். சுவர்களை அகலப்படுத்தியும், யுத்த பாவனைக்கு ஏற்றவாறு பல அடுக்குத் தளங்களை அமைத்தும், கோட்டையை விஸ்தரித்தனர். நிர்வாகக் கடமைகளை மேற்கொள்ளும் வகையில் கோட்டையினுள் மேலும் பல கட்டிடங்களையும் நிர்மாணித்தனர். த கெட் சீ பர்க், அம்ஸ்ட்ரடாம், என்துயிசன், ஹோலன்ட், த றெட்வுட் என்னும் பெயர்களைக் கொண்ட யுத்த அடுக்குத் தளங்களை அமைத்தனர். இந்தக் கோட்டைக்கு கடல் மார்க்கமாகவோ அல்லது தரை மார்க்கமாகவோ வரக்கூடிய தாக்குதல்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிகளுக்கமைய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் (கி.பி. 1782 ஆம் ஆண்டின் பின்னர்) பிரான்சு நாட்டவர் இப்பிரதேசத்தைக் கைப்பற்றினர். அவர்களும் கோட்டையினுள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினர்.
ஒல்லாந்தர் ஆட்சியை வீழ்த்திய ஆங்கிலேயர்கள், 1795 ஆம் ஆண்டில் உடன்படிக்கை மூலம் இந்தக் கோட்டையை தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். பின்னர் “Fort Fredrick” “பிரெட்றிக் கோட்டை” என்னும் பெயரைச் சூட்டினார்கள். ஆங்கிலேயர்கள் தமது தேவைகளுக்கு ஏற்றவாறு இந்தக் கோட்டையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினர். கோட்டை மதில்கள், யுத்தக் கட்டிடங்கள் யாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தி மேலும் பல புதிய கட்டிடங்களையும் நிர்மாணித்தனர். இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற பொழுது, ஒல்லாந்தர் நிர்மாணித்த யுத்த தளங்களில் பிரித்தானிய இராணுவத்தினர் நவீன ஆயுதங்களைச் சேகரித்து வைப்பதற்கும், பீரங்கிகளை நிலைப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 1948 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் நிர்வாகக் கடமைகளுக்கும், யுத்த நடவடிக்கைகளுக்கும் இந்தக் கோட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறுகிய தகவல்
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
|
|
மாவட்டம் | திருகோணமலை |
|
|
காவல் நிலையம் | திருகோணமலை |
|
|
மருத்துவமனை | திருகோணமலை |
|
|
தொடர்பு எண் | +94 262 220 039 |