குருநாகல்
per person
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருநாகல் எனப்படும் நகரம் அமைந்துள்ளது. இப்பிரதேசமும் மரபுரிமைகள் நிறைந்த பிரதேசமாகக் கருதப்படுவதுடன், இங்கு வரலாற்றுக் கால பௌத்த ஆச்சிரமங்கள், விகாரைகள் என்பனவும், நீர்ப்பாசனத் துறை சார்ந்த இடங்களும் பெருமளவில் உள்ளன. இலங்கை வரலாற்று வம்சக் கதைகளில் கூறப்பட்டுள்ளவாறு, இராச்சியங்கள் தென்மேற்குத் திசை நோக்கி நகர்ந்த போது குருநாகல் மாவட்டமானது அதன் பிரதான நிர்வாக நகரமாக அமைந்திருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண கலாச்சார சதுக்கத் திட்டத்தின் கீழ் உள்ள றிதீ விகாரையை மையமாக வைத்து, மத்திய கலாசார நிதியத்தினால் இப்பிரதேசத்தினுள் முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.