பொலன்னறுவை நூதனசாலை
பராக்கிரம சமுத்திரத்தின் பிரதான மதகு அமைந்திருக்கும் இடத்திற்கு அண்மையில் இந்த நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு தொடக்கம் ஆலாபனைப் பிரிவெனாப் பிரதேசத்தில் மத்திய கலாசார நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தொல்பொருட்களை அதே இடத்தில் காட்சிப்படுத்துவதும், பொலன்னறுவை உலக மரபுரிமைகள் பட்டியலில் உட்சேர்க்கப்பட்டுள்ளதும் ஆகிய இரண்டு காரணங்களின் நிமித்தம் இந்த நூதனசாலை குறித்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதி இந்த நூதனசாலை திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டு நிதியுதவியுடனும், லெயின்ஹி நூதனசாலைப் பொறுப்பாளர் கலாநிதி ரடொல்ப் மெனாகே அவர்களின் ஒத்துழைப்புடனும் இந்த நூதனசாலை நிறுவப்பட்டது.
பொலன்னறுவைப் புராதன நகரின் நகர நிர்மாணச் சிறப்பையும், புராதன சின்னங்களின் சிறப்புக்களையும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தெளிவு படுத்துவதே இந்த நூதனசாலையின் முக்கிய நோக்கமாகும்.
நகர மத்தியிலிருந்து நகர இறுதி வரை உள்ள விடயங்களை ஒழுங்காக விவரிக்கும் விதத்தில் காட்சிக்கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புராதன நகர நிர்மாணத் திட்டத்தின் பிரகாரம் காட்சிக்கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏழு காட்சிக்கூடங்கள் இங்கு அமைந்துள்ளன. அத்துல் நுவர, பிட்டத்த நுவர, விகாராச்சிரமத் தொகுதி, எல்லைப் பிரதேச விகாராச்சிரமங்கள், இந்து ஆலயங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் நகர நிர்மாணத் திட்டத்தினைப் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் இக்காட்சிக் கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
1 ஆம் காட்சிக்கூடம்
2 ஆம் காட்சிக்கூடம்
3 ஆம் காட்சிக்கூடம்
4 ஆம் காட்சிக்கூடம்
5 ஆம் காட்சிக்கூடம்
6 ஆம் காட்சிக்கூடம்
7 ஆம் காட்சிக்கூடம்
காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 5.00 மணிக்கு உட்செல்லல் நிறுத்தப்படும்.
அமெரிக்க டாலர் $
முழு : 25.00
பாதி : 12.50
இலங்கை RS
முழு : 5075.00
பாதி : 2537.50
மதகுருமார்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு இலவச நுழைவு