சுவர் ஓவியங்களின் அருங்காட்சியகம்
தம்புள்ள ரஜமகா விகாரை வளாகத்தில் மத்திய கலாசார நிதியத்தின் கீழ் இயங்கும் இந்த சுவரோவியங்கள் நூதனசாலை அமைந்துள்ளது.
1991 ஆம் ஆண்டு தொடக்கம் தம்புள்ள பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சுவரோவியத் தொல்பொருட் சான்றுகள் தொடர்பாக மக்களுக்குத் தெளிவூட்டுவதே இந்த நூதனசாலையின் முக்கிய நோக்கமாகும். இயற்கைக் காரணிகளாலும், பூச்சித் தொல்லைகளாலும் சேதமடைந்த சுவரோவியங்களைப் பேணிப் பாதுகாப்பதும் இதன் முக்கிய கடமையாகக் கருதப்படுகின்றது.
இலங்கையில் காணப்படுகின்ற ஒரேயொரு சுவரோவிய நூதனசாலை இந்த தம்புள்ள நூதனசாலையாகும். இலங்கையில் அநுராதபுர காலகட்டம் தொடங்கி நவீன காலம் வரை உருவாக்கப்பட்ட சுவரோவியங்களும், சீகிரியா சுவரோவியங்கள், புராண விகாரைகளில் உள்ள சுவரோவியங்கள் ஆகிய அனைத்து சுவரோவியங்களையும் ஒருங்கிணைத்து ஒரே நூதனசாலையில் காட்சிப்படுத்துவதே முக்கிய நோக்கமாக உள்ளது.
2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆந் திகதி இந்த நூதனசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்குள்ளகாட்சிக்கூடங்கள் ஆரம்ப வரலாற்றுக் காலகட்டம் தொடங்கி நவீன காலகட்டம் வரையான பல்வேறு காலகட்டங்களை வரிசைக் கிரமமாகவடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப காலகட்டம்
கௌரவத்துக்குரிய காலகட்டம்
பிற்பட்ட கௌரவத்துக்குரிய காலகட்டம்
ஆரம்ப மத்திய காலகட்டம்
பரிணாம காலகட்டம்
பிற்பட்ட மத்திய காலகட்டம்
தென்னிலங்கை ஓவியச் சம்பிரதாயங்கள்
நவீன காலகட்டம்
கற்குகைகளிலும், விகாரைகளிலும் உள்ள சுவரோவியங்கள் தொடர்பான சிறு விளக்கவுரைகள், படங்கள், வரைபடங்கள் ஆகியன இந்தக் காட்சிக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. தினசரி (கடைசி நுழைவு மாலை 4 மணிக்கு)
அமெரிக்க டாலர் $
முழு : 2.00
பாதி : 1.00
இலங்கை RS
முழு : 406.00
பாதி : 203.00