கதிர்காமம் நூதனசாலை
கதிர்காமம் மகா தேவாலய வளவினுள் அமைந்துள்ள இந்த நூதனசாலை 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்காலப் பரம்பரையின் நன்மை கருதி புராதன றுஹுணு தேசத்தின் வரலாறு, தொல்பொருட் சான்றுகள் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து அது தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதே இந்த நூதனசாலையின் முக்கிய நோக்கமாகும்.
பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய சகல மதத்தவரும் வேடுவர்களும் கதிர்காமம் என்னும் புனித தலத்தில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். ஆகவே இந்த நூதனசாலை பல்லின மக்களின் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகின்ற விசேட நூதனசாலையாகும்.
உள்ளகக் கண்காட்சிகள், வெளிப்புறக் கண்காட்சிகள் என இரு வகையான காட்சிக்கூடங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்வரும் தொல்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
1 ஆம் காட்சிக்கூடம்
2 ஆம் காட்சிக்கூடம்
3 ஆம் காட்சிக்கூடம்
4 ஆம் காட்சிக்கூடம்
(திங்கள் தவிர்ந்த ஏனைய நாட்கள்) – காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை
அமெரிக்க டாலர் $
முழு : 5.00
பாதி : 2.50
இலங்கை RS
முழு : 1015.00
பாதி : 507.50