மெதவாசல நூதனசாலை
கண்டி தலதா மாளிகைத் தொகுதிக்குரிய அரச மாளிகையில் மெதவாசல எனப்படும் பகுதியில் இந்த நூதனசாலை 2016 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரச மாளிகைக்குரிய இரட்டைக் கட்டிடங்களில் ஒன்றாகிய மெத வாசல என்னும் கட்டிடப் பகுதி இலங்கையின் கடைசி மன்னனாகிய ஸ்ரீவிக்கிரம ராஜசிங்க மன்னனது மனைவியின்வாசஸ்தலமாகும். உலக மரபுரிமைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள கண்டி மாநகரினதும், தலதா மாளிகைத் தொகுதியினதும் மிக முக்கியமான கட்டிடமாகும்.
பிற்பட்ட கண்டிய காலத்து பிரபுக்களது வீட்டு அமைப்புக்களில் காணப்படும் நாற்சார் வீடு, நடுமுற்றம்,மகா மண்டபம், தூண்கள் நிறுவப்பட்டுள்ள விறாந்தை, உள் அறைகள், மரத்தினாலான கதவு ஜன்னல்கள், மரத் தூண்கள், ஓவியங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ள இந்த நூதனசாலை மிகவும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
நாளாந்தம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை
அமெரிக்க டாலர் $
முழு : 1.00
இலங்கை RS
முழு : 203.00