சீகிரியா நூதனசாலை
மத்திய கலாசார நிதியத்தின் கீழ் இயங்கும் சீகிரியா நூதனசாலை தெற்காசியாவில் உள்ள மிகச் சிறந்த நூதனசாலையாகக் கருதப்படுகின்றது. இது சீகிரியாவின் கலாச்சார மரபுரிமைகள், தொல்பொருளியல் சிறப்புக்கள் மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்கள் மிகுந்த அரும்பொருட்கள் அடங்கிய நூதனசாலையாகும். யுனெஸ்கா நிறுவனத்தினால் மரபுரிமைப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சீகிரியாவில் மூன்று தசாப்த காலமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து பெறப்பட்ட சான்றுகள் இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இயற்கையுடன் இணைந்த மிக அழகிய தோற்றத்தில் இந்த நூதனசாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பசுமை அழகுடன் விருட்சங்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றினால் சூழப்பட்ட பிரதேசத்தில் இந்த நூதனசாலை மிக நேர்த்தியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நூதனசாலையின் மாடிகளுக்குச் செல்லும் படிக்கட்டுக்கள் சீகிரியாக் குன்றின் மேல் மாடங்களுக்குச் செல்வதற்கான படிக்கட்டுக்களை ஞாபகமூட்டுவதாக அமைந்துள்ளன.
இந்த நூதனசாலையின் நுழைவாயில் ஒரு சுரங்க வாயிலைப் போன்ற அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை சீகிரியாக் கோட்டையின் நுழைவாயிலை ஞாபகமூட்டுவதாக உள்ளன. அகழ்வுகளிலிருந்து பெறப்பட்ட மனித எலும்புக்கூடு, ஆபரணங்கள், பல்வேறு உபகரணங்கள், சிலைகள் போன்ற பல அரும்பொருட்கள் இந்த நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரும்பொருட்கள் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் பார்வையாளர்களுக்கு மிக இலகுவாக இங்குள்ள அரும்பொருட்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்களுள் இரும்பு உருக்குவதற்கான இயந்திரம் மற்றும் ஊதா நிற மாணிக்கக்கல் பதித்த தங்கத்தினாலான காதணி என்பன மிக முக்கியமான அரும்பொருட்களாகும்.
நூதனசாலையின் கீழ்த் தளத்தில் உள்ள காட்சிக்கூடங்கள் ஒவ்வொரு துறைக்கும் உரிய வகையிலும் ஒவ்வொரு கருப்பொருளுக்கும் ஏற்ற வகையிலும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கேலரி 01
கேலரி 02
கேலரி 03
கேலரி 04
கேலரி 05
கேலரி 06
ஓவியங்கள் காட்சிக்கூடம்
Museum – தினந்தோறும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை.
சிகிரியா இப்போது காலை 5.00 முதல் இரவு 7.30 வரை சுற்றுலாப் பயணிகளுக்காக பாறையின் உச்சியில் இருந்து சூரிய உதயத்தைக் காண திறந்திருக்கும்.
இலங்கையின் பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் மாதாந்த நிகழ்ச்சிகள் இந்த நூதனசாலையில் இடம் பெறுகின்றன. சீகிரியாவின் திறந்தவெளி கலையரங்கத்தில் நாடகங்கள், நடனங்கள் என்பன மேடையேற்றப்படுவதுடன், இவற்றை சுற்றுலாப் பயணிகளும் அப்பிரதேச மக்களும் கண்டுகளிப்பர்.
சீகிரியாக் குன்றிலுள்ள கோட்டையைப் பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் நுழைவுச் சீட்டுடன் இந்த நூதனசாலையைப் பார்வையிடுவதற்கான நுழைவுச் சீட்டும் வழங்கப்படும்.
அமெரிக்க டொலர்கள் $
முழு : 30.00
பாதி : 15.00
இலங்கை RS
முழு : 6090.00
பாதி : 3045.00
அருங்காட்சியகத்தை மட்டுமே பார்வையிட வேண்டும் :
அமெரிக்க டொலர்கள் $
முழு : 5.00
இலங்கை RS
முழு : 1015.00