அநுராதபுரத்தில் அபயகிரி விகாரையை அண்மித்த பிரதேசத்தில் இந்த நூதனசாலை நிறுவப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13 ஆந் திகதி இந்த நூதனசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. புராதன பஞ்சாவாச முறைப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நூதனசாலை சீனக் குடியரசு வழங்கிய நிதியுதவியுடன், மத்திய கலாசார நிதியத்தினால் நிறுவப்பட்டது.  இதற்கு மகாதிஸ்ஸ - பாஹியன் கலாச்சாரத் தொகுதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.அபயகிரி விகாரையின் முதன்முதல் விகாராதிபதியாகிய மகாதிஸ்ஸ தேரர் அவர்களையும், கி.பி. 11-12 ஆம் ஆண்டில் இங்கு வாழ்ந்த சீன நாட்டைச் சேர்ந்த பாஹியன் தேரர் அவர்களையும் நினைவு கூரும் முகமாக அவர்களது பெயர்கள் இந்த நூதனசாலைக்கு வழங்கப்பட்டது. அபயகிரி விகாரையை அண்மித்த தொல்பொருளியல் பிரதேசங்களை எடுத்துக் கூறும் வகையில் இந்த நூதனசாலை அமைந்துள்ளது.

 

அபயகிரி விகாரை வளவிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தொல்பொருட்கள் மூலம் இலங்கையில் காணப்படும் கலைச் சிறப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றின் செயற்பாடுகள் மற்றும் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றை எடுத்துக் கூறும் வகையில் இந்த நூதனசாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியினுள் பாவனையில் இருந்ததாகக் கருதப்படும் புராதன உலோப் பொருட்கள்,ஆவணங்கள், சமய சம்பிரதாயங்கள் சார்ந்த பொருட்கள், சிற்பங்கள் போன்றவையும் பழைமையான கட்டிடக்கலைகள், புராதன சம்பிரதாயங்கள், கலையம்சங்கள், சுகாதாரம் பேணல் முறைகள், சுற்றாடல் பேணல் முறைகள், நீர்ப்பாசன முறைகள், விகாராச்சிரம நிருவாக முறைகள் போன்ற பல அம்சங்களையும் பிரதிபலிக்கக் கூடிய தொல்பொருட்கள் இந்த நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நூதனசாலையின் காட்சிக்கூட அமைப்பு

உள்ளகக் கண்காட்சிகள், வெளிப்புறக் கண்காட்சிகள் என இரு வகையான காட்சிக்கூடங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்வரும் தொல்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 • செப்பு உபகரணங்கள்
 • இரும்பு உபகரணங்கள்
 • சுண்ணக்கற்களாலான சிலைகள்
 • புனித தாதுப் பேழை
 • வெண்கல புத்தர் சிலை
 • மகாயான பௌத்த காலகட்டத்து பொருட்கள்
 • சமாதி புத்தர் சிலைகள்
 • நின்ற நிலை புத்தர் சிலைகள்
 • மகா விகாரையிலிருந்து பெறப்பட்ட புத்தர் சிலைகள்
 • சீன நாட்டுப் பீங்கான்கள்
 • தங்க உபகரணங்கள்
 • முத்துக்கள், உலோகங்களாலான ஆபரணங்கள்
 • அட்டமங்கலப் பொருட்கள்
 • குவேனி நாணயங்கள்
 • சுண்ணக்கற்களாலான பொருட்கள்

 

திறக்கப்படும் நேரங்கள்

காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 5.00 மணிக்கு உட்செல்லல் நிறுத்தப்படும்.

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள்

 • கழிப்பிட வசதிகள்
 • நூதனசாலையில் தகவல் வழங்கும் அலுவலர்கள்
 • புத்தகங்கள் மற்றும் ஞாபகார்த்தச் சின்னங்களின் விற்பனை

சுற்றுலாப் பயணிகளுக்கான செயற்பாடுகள்

 • கல்வியறிவுக்கான வசதிகள் வழங்குதல் - க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான ஒப்படைகள் சார்ந்த தகவல்கள், பல்கலைக் கழக மாணவர்களுக்கான பயிற்சிகள், ஆய்வுகளுக்கான ஆவணங்கள் பெற்றுக் கொடுத்தல்
 • மாதாந்த சொற்பொழிவுகள், செயலமர்வுகள் நடாத்தல்
 • தற்காலிகக் கண்காட்சிகள் நடாத்தல்
 • 2012 ஆம் ஆண்டில் அபயகிரியவிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட புத்தர் சிலைகள், புனித தாதுப் பேழை என்பவற்றைக் காட்சிப்படுத்துதல்.

நுழைவுக் கட்டணம்

வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான (நூதனசாலைக்கும், தொல்பொருளியல் இடங்களுக்கும்) நுழைவுக் கட்டணம்

வளர்ந்தோர்களுக்கு சிறியோர்களுக்கு
ரூபா.3850.00 ரூபா.1925.00

உள்நாட்டு பிக்குகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இலவச நுழைவு

புகைப்பட தொகுப்பு