அநுராதபுரத்தில் ஜேத்தவன விகாரை வளாகத்தில் இந்த நூதனசாலை 1996 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் நகர சபை மண்டமாக அமைந்திருந்த கட்டிடத்திலேலே இந்த நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் அநுராதபுரத்தில் ஒரு விகாரையாக அமைந்திருந்த ஜேத்தவன விகாரைத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட தொல்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நூதனசாலையின் காட்சிக்கூட அமைப்பு

உள்ளகக் கண்காட்சிகள், வெளிப்புறக் கண்காட்சிகள் என இரு வகையான காட்சிக்கூடங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்வரும் தொல்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

01 ஆம் காட்சிக்கூடம் : ஜேத்தவன விகாரை வளாகத்திலிருந்து பெற்றுக் கொண்ட தொல்பொருட்கள்
02 ஆம் காட்சிக்கூடம் : சின்னங்களில் இருந்து பெறப்பட்ட புனித தாதுக்கள், ஆபரணங்கள்
03 ஆம் காட்சிக்கூடம் : ஜேத்தவன விகாரை வளாகத்திலிருந்து பெற்றுக் கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு மட்பாண்டங்கள்

திறக்கப்படும் நேரங்கள்

காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 5.00 மணிக்கு உட்செல்லல் நிறுத்தப்படும்.

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள்

  • நூதனசாலையில் தகவல் வழங்கும் அலுவலர்கள்
  • புத்தகங்கள் மற்றும் ஞாபகார்த்தச் சின்னங்களின் விற்பனை
  • கழிப்பிட வசதிகள்

சுற்றுலாப் பயணிகளுக்கான செயற்பாடுகள்

  • ஏட்டுச் சுவடிகளில் எழுதுதல்
  • கடந்த கால வெளிப்பாடுகள் - சித்திரம் தீட்டுவதற்கான வசதிகள்
  • தற்காலிக கண்காட்சிகள் (இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கான)
  • உலகத்தை வலம் வருதல் (புதிர்களைத் தீர்த்தல் விநோத நிகழ்வு)
  • வாராந்த கண்காட்சிப் பொருள்

நுழைவுக் கட்டணம்

Session is under construction

புகைப்பட தொகுப்பு