பராக்கிரம சமுத்திரத்தின் பிரதான மதகு அமைந்திருக்கும் இடத்திற்கு அண்மையில் இந்த நூதனசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு தொடக்கம் ஆலாபனைப் பிரிவெனாப்  பிரதேசத்தில் மத்திய கலாசார நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தொல்பொருட்களை அதே இடத்தில் காட்சிப்படுத்துவதும், பொலன்னறுவை உலக மரபுரிமைகள் பட்டியலில் உட்சேர்க்கப்பட்டுள்ளதும் ஆகிய இரண்டு காரணங்களின் நிமித்தம் இந்த நூதனசாலை குறித்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதி இந்த நூதனசாலை திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டு நிதியுதவியுடனும், லெயின்ஹி நூதனசாலைப் பொறுப்பாளர் கலாநிதி ரடொல்ப் மெனாகே அவர்களின் ஒத்துழைப்புடனும் இந்த நூதனசாலை நிறுவப்பட்டது.

பொலன்னறுவைப் புராதன நகரின் நகர நிர்மாணச் சிறப்பையும், புராதன சின்னங்களின் சிறப்புக்களையும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தெளிவு படுத்துவதே இந்த நூதனசாலையின் முக்கிய நோக்கமாகும்.  

நகர மத்தியிலிருந்து நகர இறுதி வரை உள்ள விடயங்களை ஒழுங்காக விவரிக்கும் விதத்தில் காட்சிக்கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நூதனசாலையின் காட்சிக்கூட அமைப்பு

புராதன நகர நிர்மாணத் திட்டத்தின் பிரகாரம் காட்சிக்கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏழு காட்சிக்கூடங்கள் இங்கு அமைந்துள்ளன. அத்துல் நுவர, பிட்டத்த நுவர, விகாராச்சிரமத் தொகுதி, எல்லைப் பிரதேச விகாராச்சிரமங்கள், இந்து ஆலயங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் நகர நிர்மாணத் திட்டத்தினைப் பற்றித் தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் இக்காட்சிக் கூடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1 ஆம் காட்சிக்கூடம் : தகவல் நிலையம், நுழைவுச் சீட்டுக் கருமபீடம், கேட்போர் கூடம்
2 ஆம் காட்சிக்கூடம் : அநுராதபுரம், பொலன்னறுவைக் காலகட்டங்களின் வரலாற்றுச் சுருக்கம்
3 ஆம் காட்சிக்கூடம் : அத்துல் நுவர
4 ஆம் காட்சிக்கூடம் : பிட்டத்த நுவர
5 ஆம் காட்சிக்கூடம் : விகாராச்சிரமங்கள்
6 ஆம் காட்சிக்கூடம் : எல்லைப் பிரதேச விகாராச்சிரமங்கள்
7 ஆம் காட்சிக்கூடம் : இந்து ஆலயங்கள்

 

திறக்கப்படும் நேரங்கள்

காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 5.00 மணிக்கு உட்செல்லல் நிறுத்தப்படும்.

Visitor activities

  • Educational programmes (providing knowledge for A/L students’ educational assignments, and providing training and information for university students’ and researchers’ dissertations.
  • Conducting monthly lectures and workshops.

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள்

  • சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் நிலையம்
  • கழிப்பிட வசதிகள்
  • நூதனசாலையில் தகவல் வழங்கும் அலுவலர்கள்
  • புத்தகங்கள் மற்றும் ஞாபகார்த்தச் சின்னங்களின் விற்பனை

நூதனசாலை நுழைவுக் கட்டணம்

  வளர்ந்தோர்களுக்கு சிறியோர்களுக்கு
உள்ளூர் Rs.50.00 Rs.25.00
வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள்
(நூதனசாலைக்கும், தொல்பொருளியல் இடங்களுக்கும்)
25 அமெரிக்க டொலர்கள் 12.5 அமெரிக்க டொலர்கள்

 

புகைப்பட தொகுப்பு