இலங்கையின் சமுத்திர வளங்களை எடுத்துக் காட்டுகின்ற இந்த நூதனசாலை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1072 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் ஆட்சியின் போது கீழைத்தேய இந்திய கம்பனி ஒன்றினால் காலிக் கோட்டையில் கட்டப்பட்ட களஞ்சியசாலை ஒன்றில் இந்த நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தென் பிராந்தியத்தின் கரையோரப் பிரதேசங்கள் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட காலிக் கோட்டை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோட்டையினுள் மதத் தலங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், வசிப்பிடங்கள், ஆயுதக் களஞ்சியங்கள், சிறைச்சாலைகள்,நீதிமன்றங்கள் போன்ற ஒல்லாந்தரின் கட்டிடக் கலையம்சங்கள் நிறைந்த பல கட்டிடங்களைக் காணலாம். ஒல்லாந்தருக்குப் பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சி ஆரம்பித்த போது, 1796 ஆம் ஆண்டில் காலிக் கோட்டையினுள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய மூவகை அந்நியர்களினதும் ஞாபகச் சின்னங்கள் எஞ்சியுள்ளன. இங்குள்ள கட்டிடக் கலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றது.

இந்த நூதனசாலையில் நான்கு காட்சிக் கூடங்கள், தகவல் நிலையம், கேட்போர் கூடம், பேணிப் பாதுகாத்தல் ஆய்வு கூடம், வெளியீடுகள் விற்பனை நிலையம் ஆகியன உள்ளடங்குகின்றன.

நூதனசாலையின் காட்சிக்கூட அமைப்பு

1 ஆம் காட்சிக்கூடம் : சமுத்திரவியல் தொல்பொருட்களின் அறிமுகம்
2 ஆம் காட்சிக்கூடம் : பல்வேறு காலகட்டங்களில் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புகள்
3 ஆம் காட்சிக்கூடம் : 17ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19ஆம் நூற்றாண்டு வரை இலங்கையின் சமூக, கலாச்சாரத் தொடர்புகள்
4 ஆம் காட்சிக்கூடம் : காலித் துறைமுகத்தில் கடலில் மூழ்கிய 'அவொன்சிட்டர்' எனப்படும் கப்பலின் சிதைவுகளும், உபகரணங்களும்

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள்

  • கழிப்பிட வசதிகள்
  • நூதனசாலையில் தகவல் வழங்கும் அலுவலர்கள்
  • புத்தகங்கள் மற்றும் ஞாபகார்த்தச் சின்னங்களின் விற்பனை

திறக்கப்படும் நேரங்கள்

காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை (அரசாங்க விடுமுறை நாட்களில் திறக்கப்பட மாட்டாது)

உல்லாசப் பிரயாணிகளுக்கானநுழைவுக் கட்டணம்

Session is under construction

புகைப்பட தொகுப்பு