தம்புள்ள ரஜமகா விகாரை வளாகத்தில் மத்திய கலாசார நிதியத்தின் கீழ் இயங்கும் இந்த சுவரோவியங்கள் நூதனசாலை அமைந்துள்ளது.

1991 ஆம் ஆண்டு தொடக்கம் தம்புள்ள பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சுவரோவியத் தொல்பொருட் சான்றுகள் தொடர்பாக மக்களுக்குத் தெளிவூட்டுவதே இந்த நூதனசாலையின் முக்கிய நோக்கமாகும். இயற்கைக் காரணிகளாலும், பூச்சித் தொல்லைகளாலும் சேதமடைந்த சுவரோவியங்களைப் பேணிப் பாதுகாப்பதும் இதன் முக்கிய கடமையாகக் கருதப்படுகின்றது.

இலங்கையில் காணப்படுகின்ற ஒரேயொரு சுவரோவிய நூதனசாலை இந்த தம்புள்ள நூதனசாலையாகும். இலங்கையில் அநுராதபுர காலகட்டம் தொடங்கி நவீன காலம் வரை உருவாக்கப்பட்ட சுவரோவியங்களும், சீகிரியா சுவரோவியங்கள், புராண விகாரைகளில் உள்ள சுவரோவியங்கள் ஆகிய அனைத்து சுவரோவியங்களையும் ஒருங்கிணைத்து ஒரே நூதனசாலையில் காட்சிப்படுத்துவதே முக்கிய நோக்கமாக உள்ளது.

2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆந் திகதி இந்த நூதனசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தம்புள்ள சுவரோவியங்கள் நூதனசாலையின் காட்சிக்கூட அமைப்பு

இங்குள்ளகாட்சிக்கூடங்கள் ஆரம்ப வரலாற்றுக் காலகட்டம் தொடங்கி நவீன காலகட்டம் வரையான பல்வேறு காலகட்டங்களை வரிசைக் கிரமமாகவடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப காலகட்டம் : கி.மு. 2 ஆம், 3 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய தந்திரி மலை, கதுருபொக்குண ஆகிய பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட குகை ஓவியங்கள்
கௌரவத்துக்குரிய காலகட்டம் : சீகிரியா சுவரோவியங்கள் (5 ஆம் நூற்றாண்டு)
பிற்பட்ட கௌரவத்துக்குரிய காலகட்டம் : கோனகல்ல, ஹிந்தகல்ல குன்று முகப்பு, மிகிந்தலை கிரிநடு சேய தாதுகர்ப்பம், மகியங்கனை தூபியின் தாதுகர்ப்பம், திம்புலாகல புள்ளிகொடயன் கற்குகை ஓவியங்கள் (கி.பி. 5 – 11 நூற்றாண்டுகள்)
ஆரம்ப மத்திய காலகட்டம் : பொலன்னறுவை கல்விகாரை, திவங்க சிலைக்கூடம்,லங்காதிலக சிலைக்கூடம் ஆகியவற்றின் ஓவியங்கள் (12 ஆம் நூற்றாண்டு)
பரிணாம காலகட்டம் : தம்பதெனிய விஜயசுந்தராராமய, கம்பளை லங்காதிலக விகாரை,கண்டி தலதா மாளிகை ஆகியவற்றின் ஓவியங்கள் (13-18 ஆம் நூற்றாண்டுகள்)
பிற்பட்ட மத்திய காலகட்டம் : தம்புள்ள ரஜமகா விகாரை,மெதவல விகாரை,தெகல்தொருவ விகாரை,கண்டி கங்காராம விகாரை,தணகிரிகல விகாரை,றிதீ விகாரை ஆகியவற்றின் சுவரோவியங்கள் (18-19 ஆம் நூற்றாண்டுகள்)
தென்னிலங்கை ஓவியச் சம்பிரதாயங்கள் : வளல்கொட விகாரை,கரகம்பிட்டி விகாரை,சமுத்திரகிரி விகாரை,குமாரகந்த விகாரை,முல்கிரிகல விகாரை ஆகியவற்றின் சுவரோவியங்கள்
நவீன காலகட்டம் : போதலே கோதமி விகாரை (1930-1940),களனி ரஜமகா விகாரை,போதலே கோட்டாபய விகாரை ஆகியவற்றின் சுவரோவியங்கள் (20 ஆம் நூற்றாண்டு)

கற்குகைகளிலும், விகாரைகளிலும் உள்ள சுவரோவியங்கள் தொடர்பான சிறு விளக்கவுரைகள், படங்கள், வரைபடங்கள் ஆகியன இந்தக் காட்சிக்கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள்

  • நூதனசாலையில் தகவல் வழங்கும் அலுவலர்கள்
  • புத்தகங்கள் மற்றும் ஞாபகார்த்தச் சின்னங்களின் விற்பனை
  • கழிப்பிட வசதிகள்

பார்வையாளர்களுக்கான செயற்பாடுகள்

  • Educational programmes (providing knowledge for A/L students’ educational assignments, and providing training and information for university students’ and researchers’ dissertations.
  • Conducting monthly lectures and workshops.

திறக்கப்படும் நேரங்கள்

7.30 a.m. to 4.30 p.m. daily (Last entrance at 4 p.m.)

நுழைவுக் கட்டணங்கள்

  வளர்ந்தோர்களுக்கு சிறியோர்களுக்கு
வெளிநாட்டவர்களுக்கு 2 அமெரிக்க டொலர்கள் 1 அமெரிக்க டொலர்கள்

புகைப்பட தொகுப்பு