கதிர்காமம் மகா தேவாலய வளவினுள் அமைந்துள்ள இந்த நூதனசாலை 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்காலப் பரம்பரையின் நன்மை கருதி புராதன றுஹுணு தேசத்தின் வரலாறு, தொல்பொருட் சான்றுகள் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்து அது தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதே இந்த நூதனசாலையின் முக்கிய நோக்கமாகும்.

பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய சகல மதத்தவரும் வேடுவர்களும் கதிர்காமம் என்னும் புனித தலத்தில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். ஆகவே இந்த நூதனசாலை பல்லின மக்களின் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகின்ற விசேட நூதனசாலையாகும்.

நூதனசாலையின் காட்சிக்கூட அமைப்பு

உள்ளகக் கண்காட்சிகள், வெளிப்புறக் கண்காட்சிகள் என இரு வகையான காட்சிக்கூடங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்வரும் தொல்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

1 ஆம் காட்சிக்கூடம் : றுஹுணு தேசத்தின் தொல்பொருளியல் பற்றிய அறிமுகம்
2 ஆம் காட்சிக்கூடம் : றுஹுணு தேசத்தின் பௌத்த மரபுரிமைகள்
3 ஆம் காட்சிக்கூடம் : கல்லினாலான பொருட்களும், மட்பாண்டங்களும்
4 ஆம் காட்சிக்கூடம் : கதிர்காம மகா தேவாலயத்தின் கலாச்சார மரபுரிமைகள்

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள்

  • சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கும் வசதிகள், திறந்த வெளிகள்
  • கழிப்பிட வசதிகள்

திறக்கப்படும் நேரங்கள்

(திங்கள் தவிர்ந்த ஏனைய நாட்கள்) - காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை

நுழைவுக் கட்டணங்கள்

வெளிநாட்டவர்களுக்கு  
வளர்ந்தோர்களுக்கு ரூபா.770.00

புகைப்பட தொகுப்பு