கொழும்பு - கண்டி பிரதான பாதையில் பஸ்யாலை என்னும் பிரதேசத்திற்கு அண்மையில் மரமுந்திரிகை வர்த்தகத்திற்குப் பிரசித்தி பெற்ற பட்டலீய என்னுமிடத்தில் இயற்கை அழகு மிகுந்த கிராமத்தில் இந்த தேசிய மாதிரி உருவமைப்பு நிலையம் அமைந்துள்ளது.

கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய கலாசார நிதியத்தினால் இந்த நிலையம் நிர்வகிக்கப்படுகின்றது. புராதனமான, மிகவும் பழைமை வாய்ந்த சிலைகள், சிற்பங்கள், செதுக்கு வேலைப்பாடுகள், ஓவியங்கள் என்பவற்றின் மாதிரிகளைத் தயாரித்து வழங்குவதே இந்த நிலையத்தின் முக்கிய நோக்கமாகும். அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த நிலையத்தில் தயாரிக்கப்படும் மாதிரி உருவமைப்புக்கள் தரத்திற் சிறந்தவையாகவும், பெறுமதி மிக்கதாகவும் உள்ளதென உறுதிப்படுத்தப்படுகின்றது.

நோக்கங்கள்

 • சித்திரக் கலை, சிற்பக் கலை, சிலை செதுக்குதல் போன்ற விடயங்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட உள்ளது.இங்கு பொருட்களின் மாதிரி உருவமைப்புக்கள் தயாரிப்பதில் விசேட கவனம் செலுத்தப்படும்.
 • சர்வதேச ரீதியாக மதிப்புக்கு உள்ளாகியிருக்கும் எமது வரலாற்றுப் பாரம்பரிய சம்பிரதாயங்கள் மற்றும் நற்பண்புகள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் மாதிரி உருவமைப்புக்களை வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கு வழங்குதல்.
 • வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கு தரத்திற் சிறந்த மாதிரி உருவமைப்புக்களை விற்பனை செய்தல்.
 • எமது புராதன சின்னங்களை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதைத் தடுத்தல், புராதன சின்னங்களைச் சேகரிப்பவர்களுக்கு இந்த மாதிரி உருவமைப்புக்களை எமது விற்பனை நிலையங்கள் மூலம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்குதல்.
 • இவ்வாறான செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்குரிய வகையில் கலாச்சாரத் துறையில் வேலை வாய்ப்புக்களை வழங்குதல்.
 • கலைப் படைப்புக்களில் திறமைசாலிகளான இளைஞர்களை ஊக்குவித்தல்.

உற்பத்திப் பிரிவு

தேசிய மாதிரி உருவமைப்பு நிலையத்தின் உற்பத்திப் பிரிவில் தயாரிக்கப்படுகின்ற மாதிரி உருவமைப்புக்கள் தரத்திற் சிறந்தவையாகக் காணப்படுவதுடன், சீமெந்து, வைபர் கிளாஸ், களிமண், பித்தளை, வெண்கலம், பீங்கான் களிமண், மரம், கல் என்னும் மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த உற்பத்திப் பிரிவில் புராதன பொருட்களின் மாதிரி உருவங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாபகச் சின்னங்கள், சிலைகள் என்பவற்றைத் தயாரித்து வழங்குவதற்கான ஆர்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

தேசிய மாதிரி உருவமைப்பு நிலையத்தில் கடமையாற்றும் விசேட பயிற்சி பெற்ற கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட மாதிரிகள்:

 • 2000 ஆம் ஆண்டில் சுகததாச விளையாட்டரங்கிற்காகத் தயாரிக்கப்பட்ட 9 அடி உயரமான விசேட தீபம்
 • 2007 ஆம் ஆண்டில் பெல்மதுளை ரன்கொத் விகாரைக்காக நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை கல்விகாரையின் மாதிரி உருவமைப்பு
 • 2006-2007 ஆம் ஆண்டில் இலங்கை - சீனா நட்புறவின் 50 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் சீனாவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட டொலமைட் என்னும் களிமண்ணால் செய்யப்பட்ட அபயகிரி விகாரையின் சமாதி நிலை புத்தர் சிலையின் மாதிரி உருவமைப்பு
 • 2008 ஆம் ஆண்டில் ஜப்பானில் இடம்பெற்ற இலங்கை மரபுரிமைகளின் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட மாதிரி உருவமைப்புக்கள் தொகுதி.
 • 2009 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற சார்க் நாட்டுத் தலைவர்களின் மாநாட்டின் போது தீபமேற்றப்படுவதற்குத் தயாரிக்கப்பட்ட விசேட பித்தளை விளக்கு
 • காலி சமுத்திரத் தொல்பொருளியல் நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சமுத்திரத் தொல்பொருளியல் அரும்பொருட்களின் மாதிரிகள்.

பாரம்பரிய உற்பத்திப் பிரிவு

திறமையுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஓவியந் தீட்டுதல், சிலை செதுக்குதல், சிற்பங்கள் தயாரித்தல் போன்ற துறைகளில் பயிற்சிகளை வழங்குவதுடன்,மூலமான சிற்பங்களின் அல்லது ஓவியங்களின் தோற்றமும், தரமும் பிசகாதவாறு மாதிரி உருவமைப்புக்களைத் தயாரிப்பதற்கான சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுதல் வேண்டும். இந்த உற்பத்திப் பிரிவின் மூலம் பயிற்சிகளைப் பெற்று சிறந்த தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் இளைஞர்கள் தமது வருவாயை ஈட்டிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் கையாள்வதற்கு அவர்களை ஊக்குவித்தல் வேண்டும். ஓவியந் தீட்டுதல், சிலை செதுக்குதல், சிற்பங்கள் தயாரித்தல், பித்தளைப் பொருட்கள், மரப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், கல்லாலான பொருட்கள் என்பவற்றைத் தயாரித்தல் போன்ற கைத்தொழிற் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சி நெறிக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இவ்வாறான கைத்தொழில்களில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருவோருக்கு முதலிடம் வழங்கப்படுகின்றது. இந்தப் பயிற்சி நெறிக்கான மூலப் பொருட்கள் மத்திய கலாசார நிதியத்தினால் வழங்கப்படுவதுடன்,பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தின் போது விசேட கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்படும். அத்துடன் தேசிய பயிலுநர் தொழில்நுட்ப அதிகார சபையினராலும் இப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

புராதன சின்னங்கள் மாதிரி உருவமைப்பு நிலையத்தின் பழைய மாணவர்கள் கடந்த சில வருடங்களாக தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிகளின் போது சிறந்த படைப்பாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றனர். இந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களே பின்னர் இங்கு ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றனர்.

புகைப்பட தொகுப்பு

repcenter001

மாதிரி உருவமைப்புக்களின் விற்பனை

தேசிய மாதிரி உருவமைப்பு நிலைய உற்பத்திகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மத்திய கலாசார விற்பனை நிலையங்களின் தோலைபெசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பட்டலீய +94 33 2285230
தேசிய நூதனசாலை, கொழும்பு +94 11 2694767
அத்தபத்து கட்டிடம், 11, சுதந்திர மாவத்தை, கொழும்பு 07 +94 11 2679921
முகாந்திரம் மாளிகை (கண்டி நாத தேவாலயம்) +94 81 2228075
சீகிரியா நூதனசாலை, சீகிரியா +94 66 2286945
காலி சமுத்திரவியல் நூதனசாலை, காலி +94 91 3786088
கதிர்காமம் நூதனசாலை, கதிர்காமம் +94 47 4928195
திஸ்ஸமகாராமய +94 47 2239082
பொலன்னறுவை நூதனசாலை, பொலன்னறுவை +94 27 2224850
ஜேத்தவன நூதனசாலை, அனுராதபுரம் +94 25 2224818