தேவநம்பியதீச மன்னன் (கி.மு. 250 – 210) அநுராதபுரத்தில் தென்திசை நுழைவாயிலின் அருகில் அமைந்துள்ள நந்தன வனம் மற்றும் மகாமேக வனம் முதலானவற்றை பிக்கு சங்கத்தினருக்காக அர்ப்பணம் செய்யதான்.  பின்னர் மகாமேகவனத்தில் முதன்முதலாக ஒரு பிக்கு ஆச்சிரமத்தையும் கட்டுவித்தான். ஆரம்பத்தில் இந்த ஆச்சிரமம் திஸ்ஸாராம என அழைக்கப்பட்டது. பின்னர் அப்பெயர் மருவி மகாமேகவனாராமய, மகாவிகாரை என மாற்றம் பெற்றது. மகா விகாரை எனப்படும் இந்த ஆச்சிரமம் அன்று தொடக்கம் பல நூற்றாண்டு காலமாக இலங்கை வாழ் பிக்குகளின் பிரதான ஆச்சிரமமாக விளங்கியது. முதன்முதலாக தேரவாத திரிபிடக நூலை ஒரு பிரபந்தமாகத் தயாரித்தமை, சவிஸ்தர அட்ட கதா என்னும் நூல் இயற்றியமை போன்ற விடயங்கள் இந்த ஆச்சிரமத்தில் வாழ்ந்த பிக்குகளின் நிர்மாணிப்புக்கள் ஆகும். அன்றைய காலகட்டத்தில் மகா விகாரை ஆச்சிரமத்தின் செயற்பாடுகள் இலங்கையின் சமய சம்பிரதாயங்கள், சமூக சம்பிரதாயங்கள், கலாச்சாரப் பண்பாடுகள், அரசியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பிரதேசத்தின் சூழலில் ஸ்ரீமகாபோதி, ருவான்வெலிசேய, தூபாராம போன்ற பிரதானமான ஆச்சிரமங்கள் உருவாகியமையும் குறிப்பிடத்தக்கது.

mahawiharaya

மகா விகாரையின் மிகவும் விரும்பத்தக்க இடங்கள்

×

ruwanwalisayaருவான்வெலி மகாசேய

 

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபிகளுள் ருவான்வெலிசேய தூபியானது, மிகவும் கௌரவத்திற்கு உரிய தூபியாகவும், மிகவும் பக்தியுடன் வழிபாடுகள் செய்யப்படுகின்ற மிக முக்கியமான தூபியாகவும் விளங்குகின்றது. இதன் காரணமாக இதனை மகாதூபி என அழைக்கின்றனர். அத்துடன் இலக்கிய நூல்களில் ரத்னமாலி மகாசேய, ஸ்வர்ணமாலி சேய எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தூபி துட்டகைமுனு மன்னனால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. (கி.மு. 161-137) குமிழ் வடிவத்தில் அமைந்துள்ள இந்தத் தூபியின் பாதம் போன்ற அடிப்பகுதியில் பெருமளவு செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் உயரம் 120 முழம் அல்லது 150 அடியாக அமைந்துள்ளது. இத்தூபியின் தாது கர்ப்பத்தினுள் ஓவியங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. சத்தாதிஸ்ஸ மன்னனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் அநுராதபுரத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் மாத்திரமன்றி இலங்கையின் பல பாகங்களிலும் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் ருவான்வெலிசேய தூபியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்கு கொண்டுள்ளனர்.

இங்கு அமைக்கபட்டிருக்கும் கற்றள மாடத்திற்கும் படிக்கட்டுக்களுக்கும் இடையில் அமைந்துள்ள யானைச் சிற்பங்களின் வரிசை மிகவும் அழகானதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் அங்கு நாற்திசையிலும் நான்கு வாயிற்கடவைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் மகாதூபி 350 அடி உயரமாகவும், 300 அடி விட்டம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டது.

ருவான்வெலி மகாசேய உள்நாட்டு வெளிநாட்டு பௌத்த மக்களது மிக முக்கியமான புனித வழிபாட்டுத் தலமாக அமைந்திருப்பதுடன், இத்தூபியை கௌரவிக்கும் முகமாக வருடாந்தம் ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று ஒரு இலட்சம் மல்லிகைப்பூக்கள் பூஜை செய்யும் மாபெரும் திருவிழா நடாத்தப்பட்டு வருகின்றது.

 

×

thuparamaya-anuradhapuraதூபாராம

கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியதன் பிரதிபலனாக, இலங்கையில் முதன்முதலாக நிர்மாணிக்கப்பட்ட தூபி தூபாராம தூபியாகும். தூபியும், ஆச்சிரமமும் ஒருங்கே அமையப் பெற்ற தலமாக அமைந்திருப்பதனால் தூபாராம என்னும் பெயர் வரக் காரணமாக அமைந்தது என மகாவம்ச நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தபெருமானின் வலது பக்கத் தாடையிலுள்ள புனித தந்தம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தத் தூபியை தேவநம்பியதீச மன்னன் நிர்மாணித்ததாகவும் கூறப்படுகின்றது. பிற்பட்ட காலகட்டத்தில் அநுராதபுர இராசதானி மற்றும் பொலொன்னறுவை இராசதானி ஆகியவற்றை ஆண்ட ஆட்சியாளர்கள் இத்தூபியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள வட்டதாகே என்னும் பகுதி கட்டிடக் கலையம்சங்கள் பொருந்திய மிக விசேடமான நிர்மாணிப்பாகும் என்பது குறிப்பிடத் தக்கது. இதனை வசப என்னும் மன்னன் நிர்மாணித்துள்ளான், (கி.பி. 65-109) இந்த அமைப்பு 63 அடி உயரமும், 59 அடி விட்டமும் கொண்டதாகும். தூபாராம விகாரையை அண்மித்தவாறு வைத்தியசாலை எனக் கருதப்படக்கூடிய கட்டிடம், சிலைக்கூடம், பிக்குணி ஆச்சிரமங்கள், உபசரிப்புக் கூடம் ஆகிய கட்டிடங்கள் காணப்படுகின்றன.