கலாச்சார முக்கோணத்தின் ஒரு முனையில் அநுராதபுரத்திற்குக் கிழக்காக அமைந்துள்ள இந்தப் பொலன்னறுவை அக்காலகட்டத்தில் இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது. இங்கு அரசாட்சி செய்த மன்னர்கள் எமக்கு விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள், சந்திரவட்டக்கல் மற்றும் பல கட்டிடச் சிதைவுகள் என்பன எமது நினைவை விட்டகலாத உரிமைகளாக உள்ளதுடன், இரண்டு நூற்றாண்டுகளுக்கு உரிய சான்றுகள் இங்கு காணப்படுகின்றன. பொலன்னறுவையின் ஏராளமான  தொல்பொருளியல் புராதன சின்னங்கள் மத்திய கலாசார நிதியத்தின் பொலன்னறுவை நூதனசாலையிலும், விருந்தினர்களுக்கான நிலையத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதலாம் விஜயபாகு மன்னன் சுமார் 52 ஆண்டுகளின் பின்னர் சோழர்களைத் தோல்வியுறச் செய்து நாட்டை மீட்டெடுத்த பின்னர் பொலன்னறுவையை தலைநகரமாகக் கொண்டு நாட்டை ஆண்டான்.

மீண்டும் தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் விஜயபாகு மன்னன் நீண்ட காலம் அரசாண்டான். ஆகவே விஜயபாகு மன்னன் பொலன்னறுவையை நிர்மாணித்த மூலகர்த்தாவாக விளங்கினான். நகரத்தைச் சுற்றிவர பாதுகாப்பு அரண்கள் கட்டப்பட்டு, அத்துல் நுவர என்னும் பகுதியிலும் சுற்றிவர பாதுகாப்பு மதில்கள் கட்டப்பட்டன. மூன்று வாவிகளை ஒன்றிணைத்து பராக்கிரம சமுத்திரத்தை உருவாக்கினான்.

இங்கு கட்டப்பட்டுள்ள மிக அழகிய கட்டிடங்கள் காரணமாக பொலன்னறுவை நகரம் மிக அழகிய நகரமாகக் காட்சியளித்தது. அக்கட்டிடங்கள் பௌத்த மதம் மற்றும் இந்து மதம் சார்ந்த கட்டிடங்களாகக் காணப்பட்டன. பொலன்னறுவையில் உள்ள லங்காதிலக விகாரை, திவங்க சிலைக்கூடம், வட்டதாகெய, ஏழு மாடி பிராசாதய மண்டபம் ஆகியன மகா விகாரை மாளிகைகள் எனக் கூறப்படுகின்ற இந்தப் புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டிய மிக முக்கிய இடங்களாகும்.

PotgulVehera-Statue

பொலன்னறுவையில் பிரசித்திபெற்ற மரபுரிமை சார்ந்த இடங்கள்

பராக்கிரமபாகு மன்னனின் அரண்மனை

×

Royal-Palace-of-King-Parakramabahuபராக்கிரமபாகு மன்னனின் அரண்மனை

செங்கற்களால் கட்டப்பட்ட ஏழு மாடிகளைக் கொண்ட மிக விசாலமான இந்த அரண்மனையின் தற்போது எஞ்சியிருக்கும் சிதைவுப் பாகங்கள் மிக விசேடமானதாகக் கருதப்படுகின்றது. மன்னன் இந்த மாளிகையை பிரம்மாவின் வாசஸ்தலமாகக் கருதி இது ஒரு வைஜயந்த பிராசாதய என வர்ணித்துள்ளான். இந்த மாளிகைக்குள் நுழைந்தவுடன் மிக விசாலமான மண்டபத்தைக் காணலாம். இந்த அரண்மனையில் அரசிகளுக்கான மாளிகைகள் வேறாக அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. அத்துடன் உத்தியோகத்தர்களுக்கான இல்லங்கள், பூங்காக்கள், தடாகங்கள் என்பனவும் இதனுள் அடங்குகின்றன. அரண்மனையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியவாறு அதனைச் சுற்றி பாதுகாப்பு அரண் போன்ற மதில்கள் கட்டப்பட்டுள்ளன.


மேலும் தகவல்...

நிஸ்ஸங்கமல்ல அரண்மனை மண்டபம்

×

Council-Chamber-of-Nissankamallaநிஸ்ஸங்கமல்ல அரண்மனை மண்டபம்

கற்களாலான கட்டிடங்களும், தூண்களும் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் அமருகின்ற ஒவ்வொரு உத்தியோகத்தர்கள் பற்றியும் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்காலகட்டத்தில் இங்குள்ள ஆசனங்களில் அமரும் உத்தியோகத்தர்களது பெயர்கள் குறித்த கற்றூண்களில் பொறிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வலது மூலையில் கல்லினால் செதுக்கப்பட்டுள்ள சிங்கத்தின் உருவம் அமைந்துள்ளது. இந்தச் சிங்கத்தின் வயிற்றுப் பகுதியில் காணப்படும் கற்சாசனமொன்றில் மன்னனின் சிம்மாசனம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொத்குல் விகாரையின் சிலைகள்

×

PotgulVehera-Statueபொத்குல் விகாரையின் சிலைகள்

பொத்குல் விகாரையை அண்மித்தவாறு இந்தக் கற்சிலை காணப்படுகின்றது. இச்சிலை மகா பராக்கிரமபாகு மன்னனின் சிலை என ஒரு சிலர் கருதுகின்றதுடன், ஒரு முனிவரது சிலையாக இருக்கலாமென வேறு சிலர் கருதுகின்றனர். இலங்கையில் காணப்படுகின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த இச்சிலை 11 அடி 06 அங்குல உயரம் கொண்டது. இச்சிலையின் கைகள் ஏட்டுச் சுவடிகளை ஏந்தியவாறு காணப்படுவதால் அவை ஒரு மன்னனது சிலையாக இருக்கலாமெனவும், கைகளில் உள்ள சுவடிகள் அம்மன்னனது பதவி தொடர்பான ஆவணமாக இருக்கலாமெனவும் ஊகிக்கப்படுகின்றது.

பராக்கிரம சமுத்திரம்

×

Parakrama-Samudra-2பராக்கிரம சமுத்திரம்

மூன்று வாவிகளை ஒன்றிணைத்து இந்த பராக்கிரம சமுத்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை நிர்மாணித்தவர் பராக்கிரமபாகு மன்னனாவான். வடபகுதியில் தோப்பா வாவியும், மத்திய பகுதியில் எரமுது வாவியும், தென்பகுதியில் தும்புட்டுளு வாவியும் அமைந்திருந்தது. பராக்கிரமபாகு மன்னன் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடனும் 'கீழைத்தேய நாடுகளின் தானியக் களஞ்சியம்' என நாட்டை பரிணமிக்கச் செய்யும் நோக்குடனும் இதனை நிர்மாணித்துள்ளான். இந்த வாவிக்கரையில் உள்ள ஓய்வு விடுதியிலிருந்து சுற்றாடலை நோக்கும் காட்சி மனதைக் கவரும் அழகிய காட்சியாகும்.


மேலும் தகவல்...

புனிதமான செவ்வக ஆச்சிரமத் தொகுதி

×

The Sacred Quadrangle2புனிதமான செவ்வக ஆச்சிரமத் தொகுதி

பராக்கிரமபாகு அரண்மனைக்கு வடக்குப் புறமாக கருங்கற்களாலான மேடையொன்றின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ள பல புனித தலங்களின் சேர்க்கை இந்த செவ்வக வடிவான ஆச்சிரமத் தொகுதியில் காணப்படுகின்றது. பொலன்னறுவைக் காலகட்டத்தின் கட்டிடக் கலையை எடுத்துக் காட்டும் தூபராம சிலைக்கூடம், அட்டதாகே எனப்படும் தலதா மாளிகை, செட்டதாகே எனப்படும் பாத்திரப் புனித பேழை மண்டபம், நிஸ்ஸங்கலதா மண்டபம், கல்பொத்த கற்சாசனம், ஏழு மாடி பிராசாத மண்டபம், விசேட தூபி ஆகியன இதனுள் அடங்குகின்றன.

Watadageவட்டதாகே

செவ்வக வடிவான ஆச்சிரமத் தொகுதியினுள் நுழையும் போது இடது பக்கத்தில் இந்த வட்டதாகே எனப்படும் அரைவட்ட வடிவான கட்டிடத்தைக் காணலாம். பராக்கிரமபாகு மன்னனது ஆட்சிக் காலத்தில் இந்த வட்டதாகேயின் மத்தியில் அமைந்திருக்கும் மாடத்தில் புனித தாதுக்கள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

HetadageHatadage (Quadrangle)

The Tooth Relic Temple of Nissankamalla, the Hatadage is known to be the house that was built in sixty days. On the wall of the porch, the outer wall and the first chamber one can find inscriptions by Nissankamalla himself. A staircase can still be seen however there are no remains of the upper floor.

AtadageQuadrangleAtadage (Quadrangle)

The first Tooth Relic Temple of Polonnaruwa was the Atadage. Built by Vijayabahu in the 11th Century the name Atadage means the House of eight relics. What remains today are 54 stone pillars which once supported the upper floor where the relic was placed.

There are inscriptions carved on many of the pillars. There is also an inscription in Tamil which was meant for the Tamil Guards of South India asking them to protect the relic just like the Swiss guards who protect the pope. A Buddha statue, almost 3m high, stands near the end of the temple.

Nissankalatha-mandapaNissankaLatha Mandapa

One of the more interesting structures within the quadrangle is the LathaMandapaya that represents flamboyant designs in ancient Sri Lankan architecture. Unlike the straight pillars one would come across in other ancient sites here you would find wobbling columns. Built by King Nissankamalla in the 12th Century the LathaMandapaya which means “Flower Scroll Hall” had a timber roof that housed a small Sthupaya.

The swaying columns are representations of the lotus stems with the flower at the capital. LataMandapa represents a “Baroque” or “Rococo” period in Sinhalese art in which the austere style yields to heavy ornamentation.

Sathmahal-pasadaSathmahal Prasada

This building is one of a kind. It adopts a design that belongs to a very ancient form of architecture which one could see in Egypt, Cambodia or Siam. Its pyramid shaped and seven stories in height. It is thought to have been built for the Cambodian soldiers who were working under the king as place of worship. The building has four entrances on each side and there is a staircase to reach the upper levels. It is still a mystery as to who built it. Since the building is solid it believed that there was a sort of a dagaba

GalpothaGal Potha

Bearing an inscription of King Nissankamalla this stone slab known as Gal Potha or Book of stone was carried from Mihinthale, Anuradhapura to Polonnaruwa. Measuring to about 8m in length and 1.2m in width this stone describes the work of King Nissankamalla and the ties he had with the rest of the world. On the side of the stone book there are two elephants showering the goddess Lakshmi with water carved on to the rock.

Rankoth Vehera

×

RankothweheraRankoth Vehera

Built by King Nissankamalla the Rankot Vehera or the Swarnamali Sthupaya is similar to the Ruwanwelisaya of Anurahapura. By the entrance of the Sthupaya there is a stone seat with inscriptions by Nissankamalla which explains that the king sat there and witnessed the construction of the dagaba. There is a stone pave way that leads to the compound and gateways that open at the cardinal points. The dome was constructed with a central cube which supported the superstructure, a distinctive method of Sthupa construction.

Alahana Pirivena

×

Alahana-ParivenaAlahana Pirivena

This educational monastic complex was founded by King Parakramabahu. He landscaped the natural hill into gentle terraces and leveled the top to form two platforms. The hill was then crowned with a dagaba, the Kiri Vehera, Lankathilaka image house and Baddhasima Prasada Chapter house. Excavations conducted by the Central Cultural Fund have revealed many other monuments including a monk’s hospital of the 12th Century, together with medical and surgical instruments.

Lankatilaka-Image-house-2Lankathilaka Image House

The Lankathilaka Image house of the Alahana Pirivena was established by King Parakrambahu. This is a massive brick building that was originally believed to be five stories high which has two gigantic columns that mark its entrance. This monument has been compared to the monuments you see in ancient Greece. Furthermore the standing Buddha statue inside of it was originally 40ft high.

KIriwahara-25Kirivehera

The Kirivehara Sthupaya remains the only monument that displays the different features of a sthupaya such as the triple berm, dome, square tee, deity’s enclosure and the umbrella cone known as the Kothkaralla. The first Archaeological commissioner H.C.P. Bell cleared a tunnel that had been dug by treasure hunters that led into the dome and examined two relic chambers that had already been ransacked.

Baddasima-pasadaBadasima Prasada

This is the largest chapter house that was built in ancient Sri Lanka by King Parakramabhahu which was initially 12 stories high. This grand monument was built for monks and their activities. The monks who congregated for rehearsing the code of discipline were provided with all requirements of accommodation within the premises.

Ancient-hospitalபுராதன வைத்தியசாலை

அகழ்வுகளின் போது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு உரிய புராதன வைத்தியசாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாற்சார் கட்டிடமாக சற்சதுர வடிவில் அமைந்துள்ள இதனுள் நடுமுற்றம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிவர அறைகள் காணப்படுகின்றன. புராதன காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பல்வேறு முறைகள் இவற்றிலிருந்து அறியக் கூடியதாக உள்ளன. தென்திசை மூலையில் ஓடம் போன்று அமைப்பில் கல்லினால் கட்டப்பட்டுள்ள ஒளடத ஓடத்தினுள் நோயாளியை இறக்கி வைத்து சிகிச்சையளிக்கும் முறை இருந்திருப்பதற்கான சான்றாக கல்லினால் நிர்மாணிக்கப்பட்ட ஒளடத ஓடம் இங்கு காணக்கூடியதாக உள்ளது. அகழ்வுகளின் போது இங்கிருந்து பெறப்பட்ட பெருமளவு ஒளடத உபகரணங்கள் சத்திர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தவை என்பது தெளிவாகின்றது. இவை மத்திய கலாசார நிதிய பொலன்னறுவை நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கல் விகாரை

×

Galviharaகல் விகாரை

ஆலாபனைப் பிரிவெனாவின் வடக்குப் புறமாக அமைந்துள்ள இந்த விகாரையில் மிக அழகிய சிலைகள் காணப்படுகின்றன. புராதன காலத்தில் இந்த விகாரையை உத்தராராம விகாரை என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அமர்ந்த நிலை, நின்ற நிலை, சயனிக்கும் நிலை ஆகிய மூன்று விதத் தோற்றங்களிலான புத்த பெருமானின் சிலைகள் இங்கு வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இலங்கையில் காணப்படுகின்ற மிகவும் அற்புதமான சிலைகளாக இவை கருதப்படுகின்றன.


மேலும் தகவல்...

திவங்க சிலைக்கூடம்

×

Tiwanka-Image-house-2திவங்க சிலைக்கூடம்

அகழ்வுகளின் போது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு உரிய புராதன வைத்தியசாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாற்சார் கட்டிடமாக சற்சதுர வடிவில் அமைந்துள்ள இதனுள் நடுமுற்றம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிவர அறைகள் காணப்படுகின்றன. புராதன காலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பல்வேறு முறைகள் இவற்றிலிருந்து அறியக் கூடியதாக உள்ளன. தென்திசை மூலையில் ஓடம் போன்று அமைப்பில் கல்லினால் கட்டப்பட்டுள்ள ஒளடத ஓடத்தினுள் நோயாளியை இறக்கி வைத்து சிகிச்சையளிக்கும் முறை இருந்திருப்பதற்கான சான்றாக கல்லினால் நிர்மாணிக்கப்பட்ட ஒளடத ஓடம் இங்கு காணக்கூடியதாக உள்ளது. அகழ்வுகளின் போது இங்கிருந்து பெறப்பட்ட பெருமளவு ஒளடத உபகரணங்கள் சத்திர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தவை என்பது தெளிவாகின்றது. இவை மத்திய கலாசார நிதிய பொலன்னறுவை நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தாமரைத் தடாகம்

×

Lotus-Pondதாமரைத் தடாகம்

கல்லினால் நிர்மாணிக்கப்பட்ட இந்தத் தடாகம் பிக்குமாரின் குளியல் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தாமரை மலர் இதழ்கள் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்தத் தடாகத்தின் மத்தியில் பிக்குமார் குளியலின் போது இளைப்பாறுவதற்காக ஒரு மேடை போன்ற அமைப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்தடாகத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கும், அழுக்கு நீரை வெளியேற்றுவதற்கும் நிலக்கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்து தேவாலயங்கள்

×

Hindu Shrinesஇந்து தேவாலயங்கள்

பதினோராம் நூற்றாண்டின் போது சோழர்களின் ஆக்கிரமிப்பு இடம் பெற்ற பின்னர் பொலன்னறுவையில் இந்து மதத்தின் வளர்ச்சி அதிகரித்திருந்தமை பற்றி வரலாறுகளில் நாம் காணலாம். இதன் காரணமாக அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த 14 இந்து தேவாலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தேவாலயங்கள் அமைந்திருந்த இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மிக அற்புதமான சிலைகள் எனவும், மிக உயர்ந்த தரத்திலான கலைப்படைப்புக்கள் எனவும் கருதப்படுகின்றன.

01 ஆம் இலக்க சிவாலயம்

×

Shiva-Devala-no-101 ஆம் இலக்க சிவாலயம்

சிவனைக் குறித்து நிற்கும் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் என்னும் மும்மூர்த்திகளுக்கும் இங்கு பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன. 13 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மாக எனப்படும் இராச்சியத்தின் ஆதிக்கம் இங்கு இடம் பெற்ற போது இந்த சிவாலயங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. இங்கிருந்து ஏராளமான வெண்கலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2 ஆம் இலக்க சிவாலயம்

×

ShivaDevalano222 ஆம் இலக்க சிவாலயம்

பொலன்னறுவையில் அமைந்துள்ள மிகவும் புராதனமான கட்டிடமாக இது கருதப்படுகின்றது. ராஜேந்திரன் எனப்படும் சோழ மன்னன் தனது மனைவியின் ஞாபகார்த்தமாக இந்தக் கோயிலைக் கட்டுவித்ததாகவும், இந்தக் கோயில் கருங்கற்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு ஏராளமான தமிழ் கல்வெட்டுக்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

நயிபென எனப்படும் நாகபட விகாரை

×

Naipena-viharaநயிபென எனப்படும் நாகபட விகாரை

இந்த விகாரை ஒரு விஷ்ணு தேவாலயமாகக் கருதப்படுகின்றது. இங்கு செங்கற்களாலான தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உச்சியில் நாகத்தின் படமெடுக்கும் தோற்றங் கொண்ட சிற்பம் காணப்படுகின்றது. சேதப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தின் சிதைவுப் பாகங்களுள் இருந்த இந்தச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பல வெண்கலச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இவை யாவும் மத்திய கலாசார நிதிய பொலன்னறுவை நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.