சீகிரியா என்பதன் பொருள் சிங்க கிரி அல்லது சிங்க பர்வதம் என்பதாகும். மலைக்குன்றின் நுழைவாயிலில் சிங்க உருவம் நிர்மாணித்திருப்பதே இந்த பெயர் வரக் காரணமாக அமைந்துள்ளது. இங்குள்ள மாளிகைக்குச் செல்கின்ற படிக்கட்டின் ஆரம்பத்தில் உள்ள நுழைவாயிலின் இருமருங்கிலும் இந்த இராட்சத சிங்க உருவத்தின் பாதங்களை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. சுமார் ஒன்றரை தசாப்த காலமாக இங்கு அரண்மனை அமைக்கப்பட்டு ஒரு இராச்சியம் நிறுவப்பட்டு ஆண்டமையால் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய பிரதேசமாக இந்த சீகிரியா விளங்கியிருந்தது. தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளுள் முதலாம் ஆயிரத்தாண்டில் நிர்மாணிக்கப்பட்ட நகரத் திட்டங்களுள் மிகச் சிறந்த நகர நிர்மாணத் திட்டமாக பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த சீகிரியா அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  இந்த சீகிரியாக் குன்றின் இயற்கையான மனங்கவர் சுற்றுப்புறச் சூழல், சிறந்த நகர நிர்மாணத் திட்டம், அவற்றின் பேணிப் பராமரித்தல்கள் போன்ற பல காரணங்களை அடிப்படையாகக் கொண்ட மிகச் சிறந்த நகர நிர்மாணமாக இது அமைந்திருப்பதனால் ஆசியாவிலேயே மிகவும் விசேடமான படைப்பாக இது கருதப்படுகின்றது. சீகிரியாவின் சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்த நகர நிர்மாணத் தோற்றம் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள நீர் அகழிகள் (இதுவரை முழுமையாக வெளிக் கொணரப்படவில்லை.) உட்பட மிக விசாலமான செவ்வக வடிவிலான தோற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டு இருந்துள்ளது. இங்குள்ள சமுத்திர நிர்மாணத் திட்டத்திலும் சீகிரியா மலைக்குன்றை மையமாக வைத்தே திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வக வடிவிலான இந்த நகர நிர்மாணத் திட்டமானது. கிழக்கு மேற்காக 3 கிலோ மீட்டர் நீளத்தையும், வடக்கு தெற்காக 1 கிலோ மீட்டர் அகலத்தையும் கொண்டுள்ளது.

சீகிரியாவிற்கு வருகை தரும் அனைவரும் சீகிரியா என்பது காசியப்ப மன்னனின் ஆட்சிக் காலத்தில் (5 ஆம் நூற்றாண்டு) உருவாக்கப்பட்டுள்ளது என்பதாகும். எனினும் தொல்பொருளியல் ஆய்வுகளின் போது காசியப்பன் ஆட்சிக் காலத்திற்கு முன்னரான காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் இருந்ததாகக் கருதப்படும் ஏராளமான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக பத்து காலகட்டங்கள் உள்ளடங்கியுள்ளதாகக் கருதப்படுகின்றது.

Lion-Staircase--2

சீகிரியாவில் பிரசித்திபெற்ற மரபுரிமை சார்ந்த இடங்கள்

பளிங்குக்கற் பலகைகள்

×

Mirror-wall--1பளிங்குக்கற் பலகைகள்

இந்த பளிங்குக்கற் பலகைகள் பூங்காவின் எல்லைப்புற மாடத்தின் மேல்மாடத்தில் அமைந்துள்ளது. அங்கு செல்வதற்கான படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பளிங்குக்கற் பலகைகள் பிரகாசமாக அமைந்திருப்பதன் காரணமாக அவை கட்டிடக்கலையின் மிகச் சிறந்த படைப்பாகவும், மிகச் சிறந்த இலக்கியப் படைப்புக்கள் அடங்கியுள்ளதாகவும் கருதப்படுகின்றது. இங்குள்ள சுவரோவியங்களில் காணப்படும் பெண் ஓவியங்களின் அழகு இயற்கை அழகுடன் இணைந்து மனங்களில் ஏற்படுத்தும் எண்ணங்களின் வடிவம் கவிதைகளாக உருப்பெற்ற படைப்புக்களை இந்தப் பளிங்குக்கற் பலகைகளில் சித்தரித்துள்ளனர். இக்கவிதைகளை குருட்டு கீ (கிறுக்கல் வரிக் கவிதைகள்) என அழைப்பர். இவ்வாறான ஞாபகார்த்தச் சின்னங்களாகிய கவிதைகள் மூலம் உருவாகிய இலக்கியப் படைப்புக்கள் சரித்திரம், சமூகவியல், பொருளாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் செனரத் பரணவித்தான அவர்கள் இவ்வாறான 685 கிறுக்கல் கவிதைகளை வாசித்தறிந்து புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஓவியங்கள்

×

Paintings--1ஓவியங்கள்

சீகிரியாவில் எழுதப்பட்டுள்ள கவிதைகளில் உள்ள கருத்துக்களின் அடிப்படையில் காசியப்ப மன்னன் காலத்தில் சீகிரியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஓவியங்கள் இருந்திருக்கலாமெனக் கருதப்படுகின்றது. தற்போது குன்றின் முகப்பில் மாத்திரம் அப்சரா என்னும் தேவதைகளின் ஓவியங்களும், அந்தப்புரப் பெண்களின் ஓவியங்களும் எஞ்சியுள்ளன. இந்த அப்சரா தேவதைகள் வான்மேகங்களின் மீது உலாவும் தோற்றம் இந்த ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரண்மனையிலுள்ள பெண்கள் மலர்களை அல்லது மலர்த் தட்டுக்களை ஏந்திய வண்ணம் அண்மையில் உள்ள பிதுரங்கல விகாரைக்குச் செல்கின்ற காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களில் பரவலாகக் காணப்படுகின்ற தெளிசாயங்கள், ஓவியங்களைத் தீட்டும் போது பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப முறைகள் என்பன வியக்கத்தக்க விடயங்களாகப் போற்றப்படுகின்றன. இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா ஓவியங்களை ஒத்ததாக உள்ளதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிங்க உருவத்தின் படிக்கட்டுக்கள்

×

Lion-Staircase--2சிங்க உருவத்தின் படிக்கட்டுக்கள்

சிங்க பாத மாடத்திலிருந்து குன்றின் உச்சியில் அமைந்துள்ள அரண்மனை வரை இந்தப் படிக்கட்டுக்கள் அமைந்துள்ளன. சிங்க பாத மாடத்தில் உள்ள இதற்கான நுழைவாயிலில் இரண்டு பெரிய சிங்க பாதங்கள் அமைந்துள்ளன. இதன் மத்தியினூடாகவே உள் நுழைதல் வேண்டும். இன்று எஞ்சியுள்ள பகுதியாக காணப்படும் இந்த சிங்க பாதங்கள் ஒரு மேடை போன்ற அமைப்பின் மீது செங்கற்களால் கட்டப்பட்டு மெருகூட்டப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உண்மையான ஒரு சிங்கத்தின் உருவம் போன்று தோற்றமளிக்கும் இந்த சிங்கத்தின் தலை மிக விசாலமானதாக அமைந்திருக்கலாமெனக் கருதப்படுகின்றது. தற்போது எஞ்சியிருக்கும் சான்றுகளின் அடிப்படையில், இங்கு வாய் திறந்து நிற்கும் சிங்கத்தின் தாடை எனக் கருதப்படும் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரண்மனை நுழைவாயிலில் சிங்க உருவம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதன் காரணமாக இதற்கு சிங்க கிரி எனப் பெயர் வரக் காரணமாக அமைந்தது எனவும், பின்னர் சீகிரி என மருவியதாகவும் கூறப்படுகின்றது.

அரச அரண்மனை

×

Royal-Palace-2அரச அரண்மனை

மலைக்குன்றின் உச்சியில் இந்த அரண்மனை அமைந்துள்ள பிரதேசம் சுமார் 1.5 ஹெக்டெயார் நிலப்பரப்பை அடக்கியுள்ளது. சீகிரியா நகர நிர்மாணத் திட்டத்தின் மிக முக்கிய பகுதியாக இந்த அரண்மனை கருதப்படுகின்றது. இந்த அரண்மனையில் மூன்று பிரதான பகுதிகள் காணப்படுகின்றன. அவையாவன கீழ் அரண்மனை, மேல் அரண்மனை, அரண்மனைப் பூங்கா என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பேராசிரியர் சேனக பண்டாரநாயக்கா அவர்களின் கூற்றுப்படி, மலைக்குன்றின் உச்சியிலுள்ள அரண்மனை மற்றும் சிங்க உருவம் என்பவற்றின் மூலம், அப்பிரதேச சுற்றுச் சூழல் முழுவதிலும் மன்னன் தமது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளதுடன், ஒட்டு மொத்த பிரதேசத்தையும் நிர்வகித்து மிக முக்கிய கேந்திர நிலையமாக விளங்கச் செய்துள்ளான்.

நீர்த் தடாகப் பூங்கா

×

Water-Garden--2நீர்த் தடாகப் பூங்கா

சீகிரியாவின் மேற்குத் திசையிலுள்ள நுழைவாயிலின் ஊடாக உள்நுழைந்தவுடன் அங்கே இந்த நீர்த் தடாகப் பூங்கா அமைந்திருப்பதைக் காணலாம். சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ள இந்தப் பூங்கா மிகத் திறமை வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கேத்திர கணித அளவுகளின் பிரகாரம் சமநிலைகள் பேணப்பட்டு மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதான பூங்காவினுள் மதில் ஒன்றினால் வேறுபடுத்தப்பட்டுள்ள மற்றுமொரு பூங்காவும் காணப்படுகின்றது. மேற்கு நுழைவாயிலூடாகப் பிரவேசித்தவுடன்,'ட' வடிவத்தில் தோற்றமளிக்கும் மிக அழகிய நான்கு நீர்த் தடாகங்கள் எமது மனங்களைக் கவருவனவாக அமைந்திருக்கும். அத்துடன் இணைந்தவாறு மிகப் பெரிய நீர்த்தேக்கமும் அமைந்துள்ளது. மேற்குறித்த தடாகங்களுக்கு அவசியமான நீரை இங்கிருந்துப் பெற்றுக் கொள்ளப்படுவதாகக் கருதப்படுகின்றது. மன்னர்கள் அமர்ந்து தடாகத்தில் இடம்பெறும் நீர் விளையாட்டுக்களைக் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் இந்தத் தடாகத்தின் மத்தியில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சற்சதுர அரண்கள்

×

Paintings--1சற்சதுர அரண்கள்

சீகிரியாவின் நகர நிர்மாணத் திட்டத்தினுள் மலைக்குன்றின் வடக்குத் திசையிலிருந்து தெற்காகவும், மேற்குத் திசையிலிருந்து கிழக்காகவும் அமையுமாறு நான்கு சற்சதுர அரண்கள் மிகவும் சாதுரியமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றை மத்திய, உள், வெளி என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நீர் அகழி

×

Paintings--1நீர் அகழி

சீகிரியா மலைக்குன்றின் நாற்புறமும் காவல் அரண்கள் உள்ளதைப் போன்று நீர் அகழிகளும் சீகிரியாவின் முக்கிய அம்சங்களாகும். இந்த நீர் அகழிகள் உள் நீர் அகழி, வெளி நீர் அகழி என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. சீகிரியா மகா வாவியிலிருந்து இந்த நீர் அகழிகளுக்கும், சீகிரியா நகர நிர்மாணத் திட்டத்தின் சகல அம்சங்களுக்கும் நீர் பாய்ச்சப்படுகின்றது. தற்போது வடபகுதி, தென்பகுதி, மேற்குப் பகுதி நீர் அகழிகள் சுத்திகரிக்கப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளதுடன், இந்த நீர் அகழிகளின் நீளம் 8 கிலோ மீட்டர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. உள் அகழிகளைப் போன்று மூன்று மடங்கு விசாலமானதாக வெளி அகழிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

பௌத்த ஆச்சிரமங்கள்

×

Paintings--1பௌத்த ஆச்சிரமங்கள்

கற்பாறைப் பூங்காவில் இருவகைச் சம்பிரதாயங்களுக்குரிய பௌத்த ஆச்சிரமங்கள் அமைந்துள்ளன. ஒன்று காசியப்ப மன்னனின் ஆட்சிக் காலத்து சம்பிரதாயமும், மற்றையது அதற்கு பிற்பட்ட காலத்து சம்பிரதாயமும் ஆகும். சீகிரியா நகர நிர்மாணத் திட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் கற்குகை பௌத்த ஆச்சிரமங்கள் இருந்துள்ளதாகவும் கருதப்படுகின்றது. அக்காலகட்டத்தில் பௌத்த பிக்குகள் கற்குகைகளில் வாழ்ந்துள்ளனர். கற்பாறைப் பூங்காவினுள் 25 கற்குகை ஆச்சிரமங்கள் அமைந்திருந்ததாக, அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள பிராஹ்மி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் மற்றும் ஏனைய தொல்பொருளியல் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. காசியப்பனது ஆட்சியைக் கைப்பற்றிய மொக்கல்லான மன்னனது ஆட்சிக் காலத்தில் 18 அல்லது 19 கட்டிடங்கள் கொண்ட ஆச்சிரமத் தொகுதி அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்தக் கற்குகைகளில் அமைக்கப்பட்ட தூபி, சிலைக்கூடம், போதிமாடம், சந்நதி மண்டபம் போன்ற பௌத்த கட்டிடங்களை மொக்கல்லான மன்னன் நிர்மாணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கற்பாறைப் பூங்கா

×

Paintings--1கற்பாறைப் பூங்கா

காசியப்ப மன்னனால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் கற்பாறைப் பூங்கா இயற்கை வளத்தையும், புவியமைப்பின் தோற்றத்தையும் கருத்திற் கொண்டு மிகவும் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. காசியப்ப மன்னன் தனது அறிவைப் பயன்படுத்தி மிகவும் வியக்கத்தக்க வகையில் இந்தக் கற்பாறைப் பூங்காவை சீகிரியா நகர நிர்மாணத் திட்டத்தினுள் அமைத்துள்ளான். அப்பிரதேசத்திலுள்ள குன்றுகள், புவியமைப்பு போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தாது இயற்கையாக அமைந்துள்ளவாறே உள்ளபடி இந்தக் கற்பாறைப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இயற்கை எமக்கு அளித்த கொடையாக இது கருதப்படுகின்றது.

அரை வட்டவடிவ கல்லாலான ஆர்ச்

×

Paintings--1அரை வட்டவடிவ கல்லாலான ஆர்ச்

நடைபாதையுடன் இணைந்தவாறு மிக அற்புதமாக அமைந்துள்ள இந்த அரை வட்ட வடிவ கல்லாலான ஆர்ச் காண்போர் மனதைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்தவாறு படிக்கட்டுக்களும் அமைந்துள்ளன. காசியப்ப மன்னன் தனது நகர நிர்மாணத் திட்டத்தில் இவ்வாறான இயற்கை அழகுடன் இணைந்த திட்டங்களை உட்புகுத்தியுள்ளதன் காரணமாக யாவரதும் மனங் கவரும் வகையில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிர்மாணங்களாக அமைந்துள்ளன.

நாகபடக் கற்குகை

×

Paintings--1நாகபடக் கற்குகை

ஒரு நாகம் படமெடுக்கும் தோற்றத்திலான கற்குகை இங்கு அமைந்துள்ளது. 'நயிபென' என்னும் சொல்லின் அர்த்தம் நாகம் படமெடுத்தல் என்பதாகும். அதன் காரணமாக இப்பெயர் உருவாகியது எனக் கருதப்படுகின்றது. இதன் உட்புறத்தின் கூரைப்பகுதியில் ஓவியங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏனைய விகாரைகளில் உள்ள கூரைக்கீழ்ப்பரப்பு ஓவியங்களை ஒத்ததாக இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. சித்துல்பவ்வ என்னும் விசாலமான கற்குகை விகாரையில் உள்ளவாறு இங்கு சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியங்களும் கடும் நிறங்களைக் கொண்டுள்ளது. இந்த ஓவியங்கள் ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டுகளுக்கு உரியதாகவும் கருதப்படுகின்றது.

எல்லைப்புற பூங்காக்கள்

×

Paintings--1எல்லைப்புற பூங்காக்கள்

கற்பாறைப் பூங்கா மற்றும் சீகிரியா மலைக்குன்று ஆகியவற்றுக்கிடையில் இந்த எல்லைப்புறப் பூங்காக்கள் அமைந்திருப்பதனைக் காணலாம். இந்த எல்லைப்புறப் பூங்காக்கள் மிக நீளமான கல்வேலிகளைக் கொண்டுள்ளது. சிறிதளவு சரிவான நிலத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்காக்களில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு மிகவும் அலங்காரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. காசியப்ப மன்னனது இந்த பூங்கா அமைப்பு தொடர்பான எண்ணக் கருத்துக்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்திருக்கலாம் என, இப்பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கட்டிட அடிப்பாகச் சிதைவுகளின் மூலம் தெளிவாகின்றது. மலைப்பாங்கான பிரதேசமாக இது அமைந்திருந்தமையால் அதற்கேற்றவாறு படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளமை விசேடமானதாகும். கற்பாறைப் பூங்காவிலிருந்து சிங்கமுக நுழைவாயில் ஊடாக மண்டபத்திற்குச் செல்லும் பாதை இவ்வாறான மலைப்பாங்கான நிலவமைப்புக் கொண்டுள்ளதனால் அதேபோன்று எல்லைப்புறப் பூங்காக்களும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.