புத்த பெருமானின் புனித தாதுக்கள் அடங்கிய புனித பேழை கண்டி தலதா மாளிகையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. பௌத்த மக்களின் கௌரவத்திற்கு உள்ளாகிய புனித தலமாக இது கருதப்படுகின்றது. தொன்று தொட்டு இருந்து வரும் சம்பிரதாயத்தின் பிரகாரம் புனித தாதுக்கள் அடங்கிய புனித பேழையை மன்னன் ஆட்சி புரியும் நாட்டின் தலைநகரத்தில் மன்னனது அரண்மனைக்கு அருகாமையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்படுதல் வேண்டும் என்பதாகும். இலங்கை வரலாற்றில் புராதன இலங்கையின் தலைநகரம் கண்டியாகும். இதுவே மன்னர் ஆட்சியின் இறுதி தலைநகரமாகவும் விளங்கியது.

மலைகள், மலை சார்ந்த வனாந்தரங்கள் ஆகியவற்றாலும், மகாவலி நதியின் நீரோட்டத்தினாலும் வளம் பெற்றுள்ள இந்த கண்டி மாநகரம் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் பிரதான மாநகரமாக விளங்கியது.

இங்கு புராதன காலந் தொட்டு கிரி முஹுத என அழைக்கப்படுகின்ற செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட பாற் கடல் அமைந்திருந்ததாகவும், அத்துடன் அரண்மனைத் தொகுதியுடன் இணைந்த நாத, விஸ்ணு, கதிர்காமக் கந்தன், பத்தினித் தெய்வம் ஆகிய கடவுளர்களின் தேவாலயங்களும் அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. அத்துடன் மல்வத்து, அஸ்கிரிய பீடங்களும் இங்கு அமைந்துள்ளன. இந்த நகரத்திற்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் யாவரும் குறுகிய காலத்தினுள் அளவிலா மகிழ்ச்சியைப் பெற்றுப் பாராட்டுகின்றனர். இங்கு வருடாந்தம் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் இடம் பெறும் பெரஹர ஊர்வலமானது எவரும் மறக்க முடியாத விடயமாக அமைந்துள்ளதுடன், ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இதனைக் கண்டு களிக்க இந்த நகரத்தில் ஒன்று கூடுவர்.

அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்குகின்ற 'பல்லே மாலய' எனப்படும் அந்தப்புர மாதர்களின் மண்டபத்தை மத்திய கலாசார நிதியத்தினால் கலாச்சார நூதனசாலையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரத்திற்குச் சமீபமாக உள்ள லங்காதிலக விகாரை, கடலாதெனிய விகாரை, அம்பெக்கே தேவாலயம் போன்ற புனித தலங்கள் தொல்பொருளியல் சான்றுகள் அடங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்களாகக் கருதப்படுகின்றன. கண்டி மாநகரை அண்மித்துள்ள பேராதனை என்னும் பிரதேசத்தில் பல்கலைக் கழகம் மற்றும் தாவரவியல் பூங்கா என்னும் விசேட அம்சங்களும் இங்கு அமைந்துள்ளன.

IMG 5318

The Most Attractive Places in Kandy

Lanka Thilaka Viharaya

Temple of the Tooth