இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள கம்பஹா மாவட்டம், மரபுரிமைகள் நிறைந்ததும், ஆரம்ப வரலாற்றுக் காலகட்டம் முதல் வாழ்ந்த மனிதர்களின் சான்றுகள் நிறைந்ததுமான பிரதேசமாகக் கருதப்படுகின்றது. இலங்கையின் சனத்தொகையில் ஆகக்கூடிய சனத்தொகையினர் வாழும் பிரதேசமாக கம்பஹா மாவட்டம் கருதப்படுவதுடன், மாவட்டம் எங்கிலும் பரந்து காணப்படுகின்ற விகாரைகள், கற்குகைகள் என்பவற்றிலிருந்து ஆரம்ப வரலாற்றுக் காலகட்ட மனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஏராளமான சான்றுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தினுள் வாரண, பிலிகுத்துவ, அலவல ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இற்றைக்கு 10,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை தொடர்பான சான்றுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்தின் பின்னர் இரும்பு யுகத்தில் வாழ்ந்த மனிதர்களின் மயானங்கள் மற்றும் ஆரம்ப வரலாற்றுக் காலத்து பிராஹ்மி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் அடங்கிய கற்குகைகள் போன்றவை இப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் அந்நியர் ஆட்சிக் காலத்து கட்டிடங்கள் என்பனவும் இப்பிரதேசத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.

2015 ஆம் ஆண்டில் மத்திய கலாசார நிதியத்தினால் இப்பிரதேசத்தில் காணப்படும் மரபுரிமை சார்ந்த இடங்கள் தொடர்பாக முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,  கட்டிடங்கள் மற்றும் சுவரோவியங்கள் அமைந்துள்ள கற்குகைகள் என்பவற்றின் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

maligatenna-940 orig