இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மரபுரிமைகள் மிகுந்த பிரதேசம் எனக் கருதப்படுகின்ற பதுளை மாநகரம் ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்து மனிதர்கள் (இற்றைக்கு 30,000 வருடங்களுக்கு முன்னர்) வாழ்ந்த பிரதேசம் என்பதனை தொல்பொருளியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த கற்குகைகள், மலையடிவாரங்கள் என்பன ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆரம்ப வரலாற்றுக் காலத்து பௌத்த  ஆச்சிரமங்கள், கட்டாரம் எனப்படும் நீர்வழிந்தோடும் முறையில் நிர்மாணிக்கப்பட்ட கற்குகை ஆச்சிரமங்கள், கல்வெட்டுக்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் மத்திய மலைநாட்டை கேந்திர நிலையமாக வைத்து தேயிலை, கோப்பி ஆகியன உற்பத்தி செய்வதில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மலைநாட்டு மக்கள் அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டனர். அவர்கள் தேயிலை உற்பத்திச் சாலைகள், பெருந் தெருக்கள், புகையிரதப் பாதைகள், புகையிரத நிலையங்கள், பாலங்கள் ஆகியவற்றை நிர்மாணித்தும், தேவாலயங்கள் நிர்மாணித்தும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். இவ்வாறு பதுளை மாவட்டத்தில் அந்நியர்களின் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இடங்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. அத்துடன் பழங்குடி மக்களாகக் கருதப்படுகின்ற வேடர்கள் வாழும் மகியங்கனை, தம்பான போன்ற பிரதேசங்களும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டில் மத்திய கலாசார நிதியத்தின் மூலம் இங்கு முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆதி வாசிகளான வேடர்களின் வாழ்க்கை தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

Welekade old market- Badulla