இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரம் மரபுரிமைகள் மிகுந்த நகரமாக விளங்குகின்றது. வரலாற்றுக் காலகட்டத்தில் திகாமடுல்ல என அழைக்கப்பட்ட மாவட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மட்டக்களப்பு நகரம் இருந்து வந்துள்ளது. அநுராதபுர காலகட்டத்தில் நாட்டிற்குத் தேவையான உணவை முழு அளவில் உற்பத்தி செய்த மாவட்டமாக திகாமடுல்ல மாவட்டம் திகழ்ந்தது என வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. சத்தாதிஸ்ஸ மன்னன் (கி.மு. 137-119) இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்காக முன்னின்று உழைத்ததாகவும், இப்பிரதேசத்தில் ஏராளமான பௌத்த விகாரைகளைக் கட்டுவித்ததாகவும் மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் அரேபிய வர்த்தகர்கள் இப்பிரதேசத்திற்கு வருகை தந்ததனைத் தொடர்ந்து இங்கு முஸ்லிம் மக்களின் சனத்தொகை அதிகரித்துள்ளது எனக் கருதப்படுகின்றது. பின்னர் கி.பி. 1622 ஆம் ஆண்டில் இப்பிரதேசம் போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கி வந்தது.  அந்தியர் ஆதிக்கம் செல்வாக்குப் பெற்றது. இவ்வாறான பின்னணியில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத சகல இனத்தவரதும் வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்ட தொல்பொருளியல் சான்றுகள் இங்கு காணப்பட்டன. எவ்வாறாயினும் கடந்த முப்பது வருட கால சிவில் யுத்தத்தின் காரணமாக அந்த மரபுரிமைகள் சேதமடையும் அபாய நிலை உருவாகியது.

மத்திய கலாசார நிதியத்தினால் 2017 ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தினுள் அமைந்திருக்கும் மரபுரிமை இடங்கள் தொடர்பான முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையின் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Batticaloa Portuguese fort