பின்னணி

பொலொன்னறுவை பிரயோக ஆண்டுகி.பி. 1017 - 1293 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது. ஒழுங்குவிதிகளின் பிரகாரம் திட்டமிடப்பட்ட இந்த நகர நிர்மாணத்தில் பௌத்த விகாரைகள் மற்றும் இந்துக் கோயில்கள் ஆகியன ஏராளமாகக் காணப்பட்டன. இந்த நகர நிர்மாணத்தின் வெளியே அமைந்துள்ள பிரதேசங்களின் கட்டமைப்புக்கள் எவ்வாறு திட்டமிடப்பட்டிருந்ததென்பது தெளிவாகக் கூறமுடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் பௌத்த மத காலகட்டம், இந்து மத காலகட்டம் மற்றும் ஏனைய மத காலகட்டங்கள் தொடர்பாகவும் சர்வமதத் தன்மை கொண்டதான நகர நிர்மாணத் திட்டம் தொடர்பாகவும் அப்பிரதேசத் தகவல்கள் தெளிவற்றதாக உள்ளது.

இதற்கு முன்னர் தலைநகரமாக விளங்கிய அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளியல் அகழ்வாராய்ச்சிகளின் போது அப்பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புக்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அநுராதபுரத்தில் விகாராச்சிரமங்கள் அமைந்திருந்ததுடன், மதம் சார்ந்த மற்றும் இல்லற வாழ்வு சார்ந்த இருவிதமான ஆட்சி முறை அங்கு காணப்பட்டமையால் இங்கு நகர நிர்மாணத் திட்டங்கள் இருந்துள்ளனவா எனவும் ஆய்வுக் குழுவினரால் ஆராயப்பட்டன. இவை தெற்கு ஆசியாவில் காணப்பட்ட மிக விசேடமான காலகட்டமாகவும் கருதப்படுகின்றன. 11ஆம் நூற்றாண்டில் அநுராதபுரம் என்னும் தலைநகரம் செயலற்றுப் போனதுடன்,அங்கிருந்து 104 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பொலொன்னறுவை நகரம் தலைநகரமாக மாற்றப்பட்டது.

ஒத்துழைப்பு நிறுவனங்கள்

மத்திய கலாசார நிதியம்,இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம், தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனம், டர்ஹாம் பல்கலைக் கழகம், களனிப் பல்கலைக் கழகம், பரோடா மகாராஜா சயிஜிராவோ பல்கலைக் கழகம், லும்பிணி அபிவிருத்தி நிதியம், நேபாள தொல்பொருளியல் திணைக்களம் ஆகிய பல நிறுவனங்கள் இந்தக் கருத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.

நோக்கம்

அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில், அநுராதபுரம் தலைநகரமாக விளங்கிய காலகட்டத்தில் நகர நிர்மாணங்களற்ற விகாராச்சிரமங்கள் மாத்திரமே அமைந்திருந்த பிரதேசமாகக் காணப்பட்டது. இந்த விகாராச்சிரமங்களால் மத வழிபாட்டுத் தலங்களும், இல்லறவாசிகளும் நிர்வகிக்கப்படுகின்ற இரட்டை நிர்வாகமுறை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே இப்பிரதேசத்தில் விரிவான அரச நிர்வாக முறை இடம்பெறாது இருந்தமையால் இந்த இராச்சியம் வீழ்ச்சியடைவதற்கான காரணங்களாக அவை அமைந்தன. அதன் பின்னர் தலைநகரமாக விளங்கிய பொலொன்னறுவை நகரம் மேற்குறிப்பிட்ட சிக்கல்களிலிருந்து விடுபடும் நோக்குடன் அரச நிர்வாக முறையை மேற்கொண்டனவா? அல்லது மத்திய காலகட்டத்தில் இலங்கையின் அரசாட்சி முறைக்கும், மதங்களின் சுதந்திரத்திற்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு உட்பட்டு சிரமங்களுக்கு உள்ளாகினவா?

பொலொன்னறுவை நகரத்தை அண்மித்த நகரங்களாக முன்னேற்றமடையாத பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு நகரத்திற்கும் இந்த பிரதேசங்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்வதே இந்தக் கருத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வுகள்

ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது தடவையாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது காலிங்க அல எனப்படும் சிற்றாறின் இருகரைகளையும் தொடர்பு படுத்துகின்ற வகையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள 8 கிளை ஆறுகளிலும், 10 கி.மீ. பிரதேசத்திலும் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் 90 தொல்பொருளியல் பிரதேசங்களும், 30 நீர்ப்பாசனத் திட்ட பிரதேசங்களும், மானிடவியல் சார்ந்த 50 இடங்களும் இனங் காணப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட 90 தொல்பொருளியல் சார்ந்த பிரதேசங்களை வகைப்படுத்திய போது,23 களிமண் தொகுதி, 28 இரும்பு கலந்த களிமண் தொகுதி, 25 விகாராச்சிரமத் தொகுதிகள் இனங்காணப்பட்ட இடங்களாகவும், இனங்காணப்படாத 9 இடங்களுமாக வகைப்படுத்தப்பட்டன. அத்துடன், அந்நியர் ஆட்சியின் போது நிர்மாணிக்கப்பட்ட பாலமொன்று,கற்களாலான பிரதேசங்கள்,களிமண் அல்லாத உலோகத்தாலான பொருட் சிதைவுகள், மெகாலிதிக் காலகட்டத்து மயான பூமி,விஜிதபுர நகரம் என அழைக்கப்பட்டதும்,அகழிகளால் சூழப்பட்டதுமான புராதன நிலப் பிரதேசமொன்று என்பன இவற்றுள் அடங்குகின்றன.

இதற்கடுத்த தடவையாக 2016 ஆம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது,காலிங்க அல எனப்படும் சிற்றாறின் இருகரைகளையும் தொடர்பு படுத்துகின்ற வகையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள 6 கிளை ஆறுகள் மற்றும்அம்பன் ஓயாவின் இருகரைகளிலும் 12 கி.மீ. பிரதேசம் என்பவற்றில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக 142 பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுள் 93 தொல்பொருளியல் சார்ந்த பிரதேசங்கள், 11 நீர்ப்பாசனத் திட்டங்கள் சார்ந்த பிரதேசங்கள், 23 மானிடவியல் சார்ந்த பிரதேசங்கள் என்பன இனங்காணப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட 93 தொல்பொருளியல் சார்ந்த பிரதேசங்களை வகைப்படுத்திய போது, 28 களிமண் தொகுதி, 23 இரும்பு கலந்த களிமண் தொகுதி, 5 இரும்பு கலந்த மண் தொகுதி, 14 விகாராச்சிரமத் தொகுதிகள் இனங்காணப்பட்ட இடங்களாகவும், இனங்காணப்படாத 11 இடங்களுமாக வகைப்படுத்தப்பட்டன. 5 மெகாலிதிக் காலகட்டத்து மயான பூமிப் பிரதேசம், 2 கற்களாலான பிரதேசங்கள், 2 புராதன கற்குழிப் பிரதேசங்கள்,ஒரு கூம்பு வடிவிலான குழி என்பன இவற்றுள் அடங்குகின்றன.

பொலொன்னறுவையில் காணப்படும் இவ்வாறான பிரதேசங்கள் அநுராதபுரத்திலுள்ள பிரதேசங்களை விட சற்று வித்தியாசமானதாகவும், அளவிற் பெரியதாகவும் அமைந்துள்ளதுடன் தோற்றத்திலும் அதிக வித்தியாசங்கள் காணப்படுகின்றன. பொலொன்னறுவையில் காணப்படும் களிமண் கலந்த பிரதேசங்கள் சுமார் 5000 சதுர செ.மீ. தூரத்திற்கு (1.5 ஹெக்டெயார்) வியாபித்துள்ளன. அத்துடன் அப்பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட சான்றுகளுள் செங்கற்கள், ஓடுகள், சட்டிபானை ஆகியவற்றின் சிதைவுகளும் உலோகச் சிதைவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சஞ்சாரங்களின் போது பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றுகள் ஒரு மீட்டரை விடக் கூடியளவான ஆழத்திலிருந்து பெறப்பட்டுள்ளன. அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அநுராதபுரத்தில் சுமார் 20 மீட்டர் ஆழத்திலிருந்து பெறப்பட்டுள்ள சான்றுகள் உள்ளன. ஆகவே அநுராதபுரத்து கிராமங்கள் பொலொன்னறுவைக் கிராமங்களை விட வித்தியாசமானவையாகக் காணப்படுகின்றன. புராதன காலத்தில் இலங்கையில் அந்நியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கிராமங்கள் நிரந்தர வசிப்பிடங்களாகவும், நாகரீக வளர்ச்சி பெற்ற குடியிருப்புக்களாகவும் இருந்துள்ளன.  பொலொன்னறுவையில் காணப்படுகின்ற விகாராச்சிரமங்கள் பெரியளவிலான தொகுதிகளாகவும், (களவாடப்பட்டுள்ள சான்றுகள் உட்பட) தனியொரு தூபியுடன் கூடிய சிறிய இடங்களாகவும் பல்வேறு வகையில் அமைந்துள்ளன. ஒழுங்கு முறைப்படி அமைக்கப்பட்ட ஆச்சிரமத் தொகுதிகளில் செங்கற்களால் கட்டப்பட்ட எல்லை மதில்கள், ஓடுகள் போடப்பட்ட கூரைகள் போன்ற அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவை அநுராதபுர சமங்கி விகாராச்சிரமங்களை விடச் சற்று வித்தியாசமானவை. புவியமைப்பின் பிரகாரம் இங்கு குடியிருப்பு முறைகளில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான குடியிருப்புக்கள் மிகத் திறமையான முறையில் திட்டமிடப்பட்டும், சிறந்த நிர்வாகத்தின் கீழும் அமைந்திருந்தன எனக் கருதமுடியும். 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது யோனி எனப்படும் பகுதி அமைந்துள்ள இரண்டு கற்தளங்கள் கண்டெடுக்கப்பட்டன. (இவற்றுள் ஒன்று உரிய இடத்திலிருந்து கண்டெடுக்கப்படவில்லை.) குறித்த ஆய்வுப் பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட இந்து மதத்திற்குரிய சான்றாக இது கருதப்படுகின்றது.

அகழ்வுகள்

2015 ஆம் ஆண்டில் புனித நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருந்த சிவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் பூர்த்தி செய்யப்பட்டன.  இங்கிருந்து பெறப்பட்ட சான்றுகளின் காலஎல்லையை நிர்ணயிக்கும் நோக்குடன் மேற்படி அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரதேசம் வடகீழ் பருவப் பெயர்ச்சியின் போது அதிக மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி விடுகின்ற நிலை காணப்படுகின்ற காரணத்தினால் அகழ்வு தொடர்பாகத் திட்டமிடுவதற்கு முன்பதாகவே அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொலொன்னறுவை தொடர்பான பல புதிய தகவல்கள் இந்த அகழ்வின் போது பெறப்பட்டன. C என்னும் அகழ்வுப் பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட சான்றுகளுள் ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்த சுற்றுமதில் ஒன்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரக் காலகட்டத்தில் பொலொன்னறுவைப் பிரதேசத்தின் எல்லைகளைக் குறித்து நிற்கும் பகுதியாக இது அமைந்திருக்கலாமெனவும், அத்துல்நுவரவிலுள்ள சுற்றுமதிலுக்குச் சமாந்தரமாக அமைந்திருந்த இந்தச் சுற்றுமதில் மத்திய கலாசார நிதியத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மதிலின் கிழக்கு மேற்காக அமைந்துள்ள எல்லையில் வடிகால்கள் அமைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. இது சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக முழு அளவிலான புவியமைப்பு ஆய்வும், சொன்டேஜ் முறையிலான அகழ்வாராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதெனவும் கூறப்படுகின்றது. இங்கு உள்ள எல்லை மதில்கள் கல்லினால் கட்டப்பட்ட தேவாலயங்களின் சுவர்களாக  அமைந்திருக்கலாமெனக் கருதப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் பொலொன்னறுவையில் உள்ள கட்டிட நிர்மாணங்கள் செங்கற்களாலும் அவற்றின் அடிப்பாகங்கள் கருங்கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளன. பொலொன்னறுவைக் காலகட்டத்தினது என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுற்றுமதில்கள் அத்துல்நுவரவிலுள்ள சுற்றுமதில்களின் நிர்மாணங்களைப் பின்பற்றியதாக அமைந்துள்ளது. இந்த எல்லைப்புறச் சுற்றுமதில்களின் அடிப்படையில் 02 ஆம் இலக்க சிவாலயத்தை அண்மித்த பிரதேசங்கள் புனித பூமியாக மாற்றப்பட்டன. குறித்து ஒதுக்கப்பட்ட ஆய்வுப் பகுதிகளில் மனிதக் குடியிருப்புக்கள் தொடர்பான சான்றுகள் எதுவும் காணப்படாத போதும், D அகழ்வுப் பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட சிதைவடைந்த கற்றூண்கள், மற்றும் A அகழ்வுப் பிரதேசத்தில் காணப்படும் வாய்க்கால்கள் சிதைவடைந்த அல்லது மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. பிற்பட்ட காலத்தில் இப்பிரதேசத்தில் மனிதக் குடியிருப்புக்கள் ஆரம்பித்த போது இப்பிரதேசம் புனித பூமியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகின்றது. கற்களாலான புனித தலங்களின் நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில்  செங்கற்களலான மதில்கள் வடதிசையில் அமைந்திருக்கலாமெனவும் கருதப்படுகின்றது. பிற்பட்ட காலத்தில் சிதைவடைந்திருந்த அதே செங்கற்கட்டிகளைக் கொண்டு புதிதாக கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்ட போது ஆரம்பத்திலிருந்ததைப் போன்று அதே முறையில் கௌரவிக்கப்பட்டன. இங்கு உருவாகிய மனிதக் குடியிருப்புக்கள் பிற்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்தன. விசேடமாக உலோகக் கைத்தொழில் மற்றும் கண்ணாடிப் பொருள் கைத்தொழில் ஆகியவை அங்கு இடம் பெற்றுள்ளன.

2016ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிகளின் போது கட்டிடக் கலைகள் தொடர்பாகவும், தொழில்நுட்பக் கலைகள் தொடர்பாகவும் மேலதிகமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதன் நோக்கமாகவே மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் தேவாலயங்களின் எல்லைப்புற மதில்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதும் முக்கிய நோக்கமாக இருந்தன. வடகிழக்கு மற்றும் தென்கிழக்குத் திசைகளிலிருந்து மிக முக்கியமான எல்லைப்புற மதில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை வெகுவாகச் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டன. பிற்பட்ட காலத்தில் ஏதேனும் காரணங்களினால் அவை பயன்படுத்தப்படாத நிலையிலும் காணப்பட்டன. தென்திசையில் காணப்பட்ட சிதைவுகள் பெரும்பாலும் அழிந்து போன நிலையிலும், ஒரு சில சறளைக் கல் பாகங்களுமே காணப்பட்டன. தேவாலய வளவுகளினுள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது ஆரம்ப கால மனிதக் குடியிருப்புக்கள் தொடர்பான சான்றுகளாக கல்லினாலான சுவர்ப் பாகங்கள், கற்றூண்கள் என்பன பெற்றுக் கொள்ளப்பட்டன. இந்த அகழ்வுகளின் போது 02 ஆம் இலக்க சிவாலயத்தின் அத்திவாரம் தொடர்பான சான்றுகளும் பெறப்பட்டன. மென்மையான மணல் மேடையின் மீது சிவாலயத்தின் அத்திவாரத்திற்கு உரியதான மெருகூட்டப்பட்ட கருங்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தத் தேவாலயம் இயற்கையாக அமைந்திருந்த குன்றின் மீது அமைந்திருந்ததாகக் கருதப்படுகின்றது. அங்கு குடியிருந்த மக்களின் பாவனையில் இருந்ததாகக் கருதப்படும் கற்பாறைகளை இந்தத் தேவாலயங்களை அமைப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

02ஆம் இலக்க சிவாலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது அங்குள்ள எல்லைப்புற மதில்களுக்கு அப்பால் கைத்தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. கைத்தொழில் நடவடிக்கைகள் காரணமாக புனித பூமி மாசு படுவதைத் தவிர்க்கும் பொருட்டு புனித பூமிக்கு வெளியே தொலைவில் தொழிற்சாலைகள் அமைந்திருப்பது வழக்கமாக இருந்தமை இதன் மூலம் தெரிய வந்துள்ளது. எவ்வாறாயினும் இவ்வாறான கைத்தொழில்களினால் பெறப்படும் வருமானங்கள் இப்புனித தலங்களுக்கு வருகை தரும் யாத்திரீகர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. இவ்வாறான நடைமுறைகள் அநுராதபுரக் காலகட்டத்தின் போது பௌத்த விகாராச்சிரமங்களை அண்மித்த பிரதேசங்களிலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பொலொன்னறுவை அத்துல்நுவர பிரதேசத்தின் வடக்கு எல்லைப்புற சுற்றுமதில்களின் இருபக்கங்களிலும் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் காலஎல்லைகளை நிர்ணயிக்கும் நோக்குடன் அந்த அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிரகாரம் இங்கு பல காலகட்டங்களுக்கும் உரிய கட்டிடக் கலைச் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கிருந்து பெறப்பட்ட கட்டிடச் சிதைவுகளுக்கப்பால் மேலும் பல மனிதக்குடியிருப்புக்களின் சான்றுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றின் காலஎல்லைகள் நிர்ணயிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெற்றுக் கொள்ளப்பட்ட பெறுபேறுகள்

  • Journal Article

Lucero, L.J., Fletcher, R. & Coningham, R.A.E. (2015). From ‘collapse’ to urban diaspora: the transformation of low-density, dispersed agrarian urbanism. Antiquity 89(347): 1139-1154.

  • Chapter in book

Coningham, R.A.E., Manuel, M.J., Davis, C.E. & Gunawardhana, P. (2017). Archaeology and Cosmopolitanism in Early Historic and Medieval Sri Lanka. In Sri Lanka at the Crossroads of History. Biedermann, Z. & Strathern, A. London: UCL Press. 19-43.