பின்னணி

இந்தக் கருத்திட்டத்தினை மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம், தொல்பொருளியல் திணைக்களம், களனிப் பல்கலைக் கழகத்தின் தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொள்வதுடன், டர்ஹாம் பல்கலைக் கழகத்தின் கலாச்சார உரிமைகளின் பண்புகளும், பாவனைகளும் என்னும் பிரிவின் யுனெஸ்கோ பேராசிரியரது ஒத்துழைப்புடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை பிரித்தானியா அக்கடமியும், டர்ஹாம் பல்கலைக் கழகத்தின் மத்திய கால, ஆரம்ப கால கல்வி நிறுவனங்களும் மேற்கொள்வதுடன், மத்திய கலாசார நிதியம், தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவையும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

26 வருடங்களாக நடைபெற்று வந்த யுத்த சூழ்நிலை முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் தற்போது உருவாகி வரும் மனிதாபிமான கலாச்சாரம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.  யுத்தங்கள் முடிவடைந்த பின்னர் மானிட வாழ்வுப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பதற்காகவும், அழிந்து போயிருக்கும் கலாச்சார உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும், சமாதானத்தை நிலைநாட்டுவதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியமும், தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான பொருளாதார அபிவிருத்திகளின் அவசியமும் உணரப்பட்டுள்ளது.(Pushparatnam, 2014)

யுத்தம் நடைபெற்ற வேளையில் தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாணக் கோட்டை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 22 ஹெக்டெயார் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தக் கோட்டையின் உட்புறத்தில் ஏராளமான சேதங்கள் காணப்படுவதுடன், கோட்டை மதிலும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. 1618 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் இந்தக் கோட்டை செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்த போதும், 1658 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைபற்றிய ஒல்லாந்தர்கள் அதனை ஐங்கோண வடிவில் மாற்றியமைத்தனர். அண்மைக்கால யுத்தங்கள் நடைபெறுவதற்கு முன்பாக இக்கோட்டை ஆசியாவிலேயே மிகச் சிறந்த அந்நியர் ஆட்சிக் காலத்து நினைவுச் சின்னமாக அமைந்திருந்தது. (Nelson, 1984) இக்கோட்டை தொடர்பான அந்நியர் ஆட்சிக் கால வரலாற்றுத் தகவல்கள் உள்ள போதும், அவை மேலோட்டமான தகவல்களேயன்றி, அக்கால கட்டத்தின் கட்டிட நிர்மாணங்கள் தொடர்பான மிகவும் துல்லியமான தகவல்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திலும், இலங்கையின் வடபகுதியிலுள்ள ஏனைய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கால தொல்பொருளியல் ஆய்வுகளின் பிரகாரம், இந்திரஜால (1965), பத்மநாதன் (1969), ரகுபதி (1987) ஆகியோரின் முன்னோடி ஆய்வறிக்கைகள் உள்ளன. இத்தகவல்கள் ஏனைய பிரதேசங்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்களின் விளக்கங்கள் போலல்லாமல் மேற்குறித்த பிரதேசங்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்கள் பூரணமற்றதாகவே காணப்படுகின்றன. யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் மேற்குறித்த ஆய்வுகள் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் இன்மை காரணமாகவோ அல்லது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள புராதன நகரங்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டன் காரணமாகவோ மேற்குறித்த பிரதேசங்களின் தகவல்கள் பெற்றுக் கொள்வதில் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் அந்நியர் ஆட்சிக் காலத்திற்கு முன்னரான காலப்பகுதியின் தொல்பொருட் சான்றுகள் தொடர்பான காலஎல்லைகள், விளக்கங்கள் போன்றவற்றில் வரலாற்று ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் உள்ளதுடன், சிலவற்றில் வீதி ரேகைகள் மாத்திரமே காணப்படுகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் சுமார் நான்கு மீட்டர் ஆழத்தில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுகள் நடாத்தப்பட்டன. அங்கிருந்து ஆரம்ப காலகட்டத்திற்கு உரிய ரூலட் எனப்படும் உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மத்திய காலகட்டத்திற்கு உரிய இஸ்லாமிய, சீன கலாச்சார மட்பாண்டங்களின் சிதைவுப் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட சான்றுகளை ஒத்ததாக (Carswell, Deraniyagala and Graham 2013) இங்கிருந்து பெறப்பட்ட சான்றுகளும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுவதுடன், அந்நியர் ஆட்சிக் காலத்திற்கு முன்னரான காலகட்டத்தில் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகள் இங்கு இடம்பெற்றுள்ளதற்கான சான்றுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கு மேற்கொள்ளப்பட்ட ரேடார் முறையிலான ஆராய்ச்சிகளின் போது நிலத்தின் ஆழத்தில் காணப்பட்ட பழைமையான கட்டிடக் கலைகள் தொடர்பான சான்றுகள் ஏனைய தகவல்களுடன் இணைந்த தகவல்களாகக் கருதப்படுகின்றன.

நோக்கங்கள்

பேராசிரியர் குணவர்தன உட்பட மத்திய கலாசார நிதியத்தின் தொல்பொருளியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் உட்பட தொல்பொருளியலாளர்கள்,டர்ஹாம் பல்கலைக் கழகத்தின் கலாச்சார உரிமைகளின் பண்புகளும், பாவனைகளும் என்னும் பிரிவின் யுனெஸ்கோ பேராசிரியர் ஆகியோரது ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணக் கோட்டையில்​ தொல்பொருளியல் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. பிரித்தானியா அக்கடமி மற்றும் ஐ.எம்.ஈ.எம்.எஸ். நிறுவனம் ஆகியவை இதற்கான நிதியுதவிகளை வழங்குவதுடன், இந்த அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு பெற்றுக் கொள்ளப்படும் சான்றுகள், கட்டிடச் சிதைவுப் பாகங்கள் ஆகியவற்றின் காலஎல்லையை நிர்ணயிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கவனஞ் செலுத்தப்படாமல் விடுபட்ட நிலையில் காணப்பட்ட யாழ்ப்பாணத்தின் ஆரம்ப வரலாற்றுக்கால மற்றும் அந்நியர் ஆட்சிக்கால மரபுரிமைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் இந்த ஆய்வுகளின் மூலம் கிட்டும் எனவும், இத்திட்டத்தின் மூலம் வடக்குப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையின் அபிவிருத்திகளுக்கும் சாதகமாக அமையும் எனக் கருதப்படுகின்றது. பேராசிரியர் புஸ்பரத்தினம் அவர்களின் கூற்றுப்படி, வட பிராந்தியத்தில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் அங்குள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், புராதன வரலாற்று இடங்கள் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவூட்டல்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இதன் மூலம் அவ்வாறான சின்னங்கள் பேணிப் பாதுகாக்கப்படுவதுடன், அவற்றின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய சந்தர்ப்பங்களும் அமைகின்றன. (2014 : 10)

ஆரம்ப அகழ்வுகளின் போது இனங்காணப்பட்ட குறித்த இடங்கள் தொடர்பான காலஎல்லையை நிர்ணயிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் பிரகாரம் அவற்றை இலங்கை மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் சான்றுகளாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளுடன் இணைக்கப்படலாமெனவும் கருதப்படுகின்றது. நிலத்தை ஊடுருவிச் சென்று அறியக்கூடிய ரோடார் கருவிகள் மூலம் கோட்டையின் ஆரம்ப கால கட்டிடக்கலைகள் தொடர்பாக அறியக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையலாம் எனக் கருதப்படுவதுடன், இதன் மூலம் ஆரம்ப வரலாற்றுக் கால மனிதக் குடியிருப்புக்கள் தொடர்பான தகவல்களைப் பெறக்கூடியதாகவும், அவை தொடர்பான சான்றுகளைக் பெறக்கூடியதாகவும் உள்ளது. இதன் மூலம் தொல்பொருளியல் அத்தாட்சிகள் உள்ள பிரதேசங்களை இனங்காண்பதற்கும், அவற்றின் பாதுகாப்புக் கருதி அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், எதிர்காலத்திற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், நீர்க் குழாய்கள் பொருத்துதல், நிலக்கீழ் மின்கம்பிகள் பொருத்துதல் போன்ற விடயங்களுக்கும்  இந்த ஆய்வுகள் உதவியாக அமையும் எனவும் கருதப்படுகின்றது. யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வதற்கும், உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், யுத்தம் காரணமாக சேதங்களுக்கு உள்ளாகியிருந்த புராதன சின்னங்களை மறுசீரமைப்புச் செய்வதற்கும், அவை தொடர்பான அறிக்கைகள் தயாரிப்பதற்கும் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக சேதத்திற்குள்ளான பிரதேசங்களும் இத்திட்டத்தினுள் அடங்குகின்றன.

ஏதேனுமொரு அனர்த்தத்தின் முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள், உதாரணத்திற்கு நேபாளத்தில் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வுகளின் அடிப்படையில் சேதத்திற்குள்ளான தொல்பொருளியல் சான்றுகள் இருப்பின் அவற்றினை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக அமைந்திருந்தது. இவ்வாறான ஆய்வுகள் மூலம் மரபுரிமைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக தொல்பொருளியல் ஆய்வாளர்களுக்கும், ஏனைய ஆய்வாளர்களுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், பௌதீகவியல் மற்றும் கலாச்சார சாதனங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கும் உறுதுணையாக அமையும் எனவும் கருதப்படுகின்றது. அவ்வாறான மரபுரிமைப் பிரதேசங்கள் யுத்தம் அல்லது அனர்த்தங்கள் காரணமாக சேதத்திற்கு உள்ளாகியிருந்தால் அவற்றை மீண்டும் மறுசீரமைப்பதற்கு மேற்குறித்த ஆய்வுகள் உறுதுணையாக அமையும்.

கண்டுபிடிப்புக்கள்

2017 ஆம் ஆண்டில் ஜுன், ஜுலை மாதங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மற்றும் மத்திய கலாசார நிதியம் ஆகியவை இணைந்து யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தர் கோட்டையில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சிகளுக்கான அகழிகள் வெட்டப்படும்போது கோட்டையின் அத்திவாரப் பகுதிகள் தொடர்பான தகவல்களையும், நிலத்தின் அடியில் காணப்படும் உரிமைச் சொத்துக்கள் தொடர்பான தகவல்களையும்பெற முடிவதுடன், இவை பற்றிய வரைபடங்களைத் தயாரிப்பதற்கும் உறுதுணையாக அமையுமெனக் கருதப்படுகின்றது. அத்துடன் ஆளில்லா விமானம் (UAV), ரேடார் கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடாத்தப்பட்டன. அத்துடன் 18 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட ஒல்லாந்தர் தேவாலயம் தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு தொல்பொருளியல் தொடர்பான தகவல்கள் குறித்துக் கொள்ளப்பட்டன.

ஆளில்லா விமானம் (UAV), ரேடார் கருவிகள் (GPR) ஆகியவை மூலம் செய்யப்படும் ஆய்வுகள்

கோட்டையின் உட்புறத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள், உள் சுற்றுமதில்கள், நீர் அகழிகள், சுற்று மதிலுக்கு வெளியே உள்ள சுற்றாடல் போன்றவற்றை ஆளில்லா விமானம் (UAV) மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகள் மூலம் வடமேற் திசையில் இருந்த அரை வட்ட வடிவான மதில்களுடன் மூன்று காவலரண்ககள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பெரும்பாலும் போர்த்துக்கேயர் கோட்டையின் சிதைவுப் பாகங்களாக இருக்கலாமெனக் கருதப்படுகின்றது. ரேடார் கருவிகள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றுகளின் ஆய்வுகள் உறுதிப்படுத்தப்பட்டன. நிலக்கீழ் தொல்பொருளியல் சான்றுகள் பல இந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றின் நீள அகல ஆழங்களின் அளவுகள் கணிக்கப்பட்டுள்ளன. திறந்த வெளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது ஆரம்ப காலத்தின் போர்த்துக்கேயக் கட்டிட நிர்மாணங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. ரேடார் கருவிகள் மூலம் பெறப்பட்ட சான்றுகள் பகுப்பாய்வு செய்யப்படுதல், வரைபடங்கள் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப காலத்துத் தகவல்கள் பலவற்றை வெளிப்படுத்திக் கொள்வதற்கான சாத்தியங்களும், அத்தகவல்களின் அடிப்படையில் இதன் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. அத்துடன் இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும், அபிவிருத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும், இதன் மரபுரிமைகளைப் பேணிப்  பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கும் இத்தகவல்கள் பெரிதும் பயன்படுமெனவும் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல தொல்பொருளியல் அகழ்வுகளுக்கு இவை மூலாதாரமாக விளங்குமெனவும் கருதப்படுகின்றது.

அகழ்வுகள்

புராதன மனிதக் குடியிருப்புப் பிரதேசங்கள்மற்றும் வரலாற்றுத் தகவல்கள் என்பன காணப்படுகின்ற தொல்பொருட்கள் அடங்கிய பிரதேசத்தினை இலகுவாகக் கண்டறியக்கூடிய வகையில் குறித்த அகழ்வுப் பிரதேசத்தில் மிகவும் ஒழுங்கு முறையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பிரகாரம் ஒல்லாந்தர் கோட்டையின் மேற்குச் சுற்றுமதிலின் அருகில் முதன்முதல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இங்குள்ள கட்டிடச் சிதைவுகளைக் கொண்டு கோட்டை மதிலின் ஆழம் மற்றும் அதன் காலஎல்லைகள் என்பவற்றை நிர்ணயிப்பதே இந்த அகழ்வு நடவடிக்கையின் நோக்கமாக அமைந்தது. அண்மையில் இங்குள்ள சிதைவுகளை அகற்றிய போது அதனடியிலிருந்து மேலும் பல உறுதி மிக்க சான்றுகள் பெறப்பட்டன. பவளப் பாறைகள், சுண்ணக்கல் கட்டிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை போர்த்துக்கேயர் காலத்தில் கட்டிட நிர்மாணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.

இப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் சிறைக்கூடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள கட்டிடத்தில் உள்ள சிதைவுகள் தொடர்பாக எமது இரண்டாவது அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இங்கு காணப்பட்ட மேல், கீழ் ஆகிய இரண்டு தட்டுக்களில் மேற்தட்டில் ஒல்லாந்தரால் பயன்படுத்தப்பட்ட பீங்கான் துண்டுகள், நீர்க்குழாய்கள் உட்பட ஐரோப்பிய காலகட்டத்துக் கட்டிடச் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.  ஒல்லாந்தரது பரணித் தாழிகள், ஆரம்பகால இஸ்லாமிய மெருகூட்டப்பட்ட  பாத்திரங்கள்,ரூலட் எனப்படும் பாத்திரங்கள், வெள்ளை, சிவப்பு ஆகிய வர்ணப் பாத்திரங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டன.  இதன் மூலம் இந்து சமுத்திர வலயத்தில் அந்நியர் ஆதிக்கத்தின் தகவல்கள் பல உறுதிப்படுத்தப்பட்டன.

இறுதியாக ஒல்லாந்தர் ஆட்சியின் போது ஆளுநராகவிருந்த லெப்டினன்ட் ஒருவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகப் பயன்படுத்தப்பட்ட இராணி மாளிகை எனப்படும் கட்டிடத்தில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு காணப்பட்ட ஒரு சில சிதைவுப் பாகங்கள் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை என அறியப்பட்டுள்ளது. அகழ்வு மேற்கொள்ளப்பட்ட ஆழமான பகுதியில் புராதன காலத்திற்குரிய சுவர் போன்ற கட்டிடச் சிதைவுகள் காணப்பட்டன. இந்தக் கட்டிடங்கள் பவளக் கற்பாறைகளால் கட்டப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்டுள்ள பீங்கான் துண்டுகள் கண்டெடுக்கபட்டுள்ளதுடன், மேலும் பல கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களும் கண்டறியப்பட்டன. பவளப் பாறைகள் தவிர வேறெந்த தடயங்களும் இங்கு காணப்படாமையால், இந்தக் கோட்டையின் கிழக்குப் பகுதியில்  பிற்பட்ட காலத்தில் ஒல்லாந்தர்கள் புதிதாக கட்டிடங்களை நிர்மாணித்திருக்கலாமென ஊகிக்கப்படுகின்றது.

பேராசிரியர் புஸ்பரத்தினம் அவர்களது அறிக்கையின் பிரகாரம், யாழ்ப்பாணக் கோட்டையில் முதலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் அந்நியர் ஆட்சிக்கு முன்பாக இருந்த காலகட்டத்திற்குரிய பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகளுள் கறுப்பு, சிவப்பு வர்ண மட்பாண்டங்கள் (கி.மு. 1000-100), சாம்பர் வர்ண மட்பாண்டங்கள் (கி.மு. 500-200), ரூலட் மட்பாண்டங்கள் (கி.மு. 200), சிவப்பு வர்ண மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்கள் (கி.மு. 100-800) போன்றவை இந்து சமுத்திரத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது. அத்துடன் மேற்காசிய நாடுகளுடனான தொடர்புகளை உறுதிப்படுத்தும் சசேனியன் - இஸ்லாமிய மட்பாண்டங்களும் (கி.மு. 200-800), கிழக்காசிய நாடுகளுடனான தொடர்புகளை உறுதிப்படுத்தும் யு.ஏ. பச்சை வர்ண மட்பாண்டங்களும் (கி.மு. 800-900), ஒல்லாந்தர் பாஷாணங்கள் (கி.மு. 700-1100), மிங் ஆட்சிக் காலத்து மட்பாண்டங்கள் (கி.மு. 1300-1600), ஐரோப்பியர் ஆட்சிக் காலத்து மட்பாண்டங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டன. ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சிக் காலத்து மட்பாண்டங்களில் உற்பத்தியாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.  தற்போது ரேடியோ காபன் ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை எதிர்பார்த்து இருப்பதுடன், ஏற்கெனவே கிடைக்கப் பெற்ற சான்றுகளின் பகுப்பாய்வுகள் மூலம் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட மிக நீண்டகால வரலாற்றுத் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. சர்வதேச வர்த்தகத்தில்; ஒரு முக்கிய கேந்திர நிலையமாகவும், சர்வதேசத் தொடர்புகள் அதிகமாகக் காணப்பட்ட பிரதேசமாகவும் இப்பிரதேசம் கருதப்படுகின்றது. ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வாறான சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான சான்றுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பிரதேசம் தொடர்பான  ஆரம்ப வரலாற்றுக் கால தகவல்கள், அந்நியர் ஆட்சிக் கால தகவல்கள், யாழ்ப்பாணம் இந்து சமுத்திர வலயத்தில் எவ்வாறான ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது என்னும் தகவல்களைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வுகள், ஆய்வுகள், பொருட்களை வகைப்படுத்துதல் என்பன தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனர்த்தங்களின் பின்னரான அகழ்வாராய்ச்சிகள்

அண்மைக்காலமாக இடம்பெற்ற அனர்த்தங்களின் போது யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த புராதன கட்டிடச் சிதைவுகளுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை மீளமைப்பதற்கும், பேணிப் பாதுகாப்பதற்கும் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நிலக்கீழ்ப் பகுதியில் உள்ள கலாச்சார ரீதியான தொல்பொருளியற் சான்றுகளைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் அவற்றை குறித்த இடங்களிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னர் அச்சான்றுகள் தொடர்பான அறிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டியுள்ளதென்பது மிக முக்கியமான விடயமாகும். நேபாளத்தில் கத்மண்டு பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது கடைப்பிடிக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் இங்கும் பின்பற்றப்பட்டன. இதன் பிரகாரம் யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்த குருயிஸ் கர்க் தேவாலயத்தில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத் தேவாலயம் 1707ஆம் ஆண்டில் ஒல்லாந்தரால் கட்டப்பட்டுள்ளது. யுத்தம் இடம் பெற்ற காலகட்டத்தில் இங்கு நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த காரணத்தினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக இதன் கட்டிடச் சிதைவுப் பாகங்கள் பிரதேசமெங்கும் சிதறிக் காணப்பட்டன. ஆகையால் இப்பிரதேச வடகிழக்குப் பகுதியைப் பல பகுதிகளாக வகுத்து ஆய்வுகளை மேற்கொள்வதிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியிருந்தது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு சற்சதுரப் பகுதிகளாக பிரித்தெடுத்து கட்டிடத்திற்கு வெளியே அதே போன்ற சற்சதுரப் பகுதிகளுக்கு மாற்றப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் இடவசதியைக் கட்டுப்படுத்துவதற்கும், சிதைவுகளை விரைவாக, ஒழுங்குமுறையாக அகற்றி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இலகுவாக அமைந்திருந்தது. ஒவ்வொரு சதுரத்தினுள்ளும் கட்டிடச் சிதைவுகள் எண்ணப்பட்டு, நிறுக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணக் கோட்டையின் சிதைவுகளையும், நினைவுச் சின்னங்களையும் ஒழுங்குபடுத்துவதில் இது ஒரு சிறந்த முறையாகக் கருதப்பட்டது. ஏனெனில் மீண்டும் இப்பொருட்களைப் பெற்றுக் கொள்வது மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. இங்குள்ள பவளப் பாறைகளைப் பெயர்த்தெடுப்பது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ள காரணத்தினால் அவற்றை அகற்ற முடியாதுள்ளது. அத்துடன் 18ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரால் கட்டிடங்கள் கட்டப்படுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள்  இல்லாமையும் ஒரு காரணமாக உள்ளது.

சிதைவுப் பாகங்களை அகற்றும் போது அங்கிருந்த சிலைகளின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டு அறிக்கையிடப்பட்டன. அத்துடன் இடத்துக்கு இடம் எடுத்துச் செல்லப்படத்தக்க பல பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இவற்றின் மூலம் தேவாலயத்தின் வரலாறுகள் பற்றிய தகவல்கள் பல வெளிக் கொணரப்பட்டன. அத்துடன் இங்கு சுவர்களில் எழுதப்பட்டிருந்த ஞாபகார்த்த வாசகங்கள் அடங்கிய சுவர்ப்பகுதிகளும் இவற்றுள் அடங்குகின்றன. இவ்வாறான சிதைவுகளை ஒன்று சேர்த்து அவற்றைப் பூரணப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தேவாலய வளவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களது தகவல்களும், நினைவு கூர வேண்டியவர்கள் பற்றிய தகவல்களும் இவற்றின் மூலம் பெறப்படவுள்ளன.

இங்குள்ள சிதைவுகளை அகற்றும் போது தேவாலயத்தின் அத்திவாரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றை ஆய்வு செய்வதற்கும் வாய்ப்புக் கிடைத்தது. தேவாலயத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போதும், பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கையின் போதும் இத்தகவல்கள் பெரிதும் உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் கட்டிடத்தை மறுசீரமைக்கும் போது சுவர்களைத் தாங்கி நிற்கக்கூடிய சக்தி அத்திவாரத்திற்கு உள்ளதா என்பதும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளது. அத்திவாரத்தின் ஆழம் கண்டறியப்பட்டுள்ளதுடன், அங்குள்ள பவளப் பாறைகளிலும், சுண்ணக் கற்களிலும் வெடிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒல்லாந்தர் காலத்துத் தேவாலயத்தின் வெளிச் சுவர்கள் மிக உறுதியானதாக அமைந்திருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதுடன், இவை கடந்த யுத்த காலத்தின் போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்பட முடியாது என்பதும் தெளிவாகியுள்ளது. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள ஒதுக்கீடுகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் தேவாலயத்தின் சிதைவுற்ற பகுதிகளில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதற்கும், பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகளுக்கும், அங்குள்ள ஏனைய நினைவுச் சின்னங்களை மறுசீரமைப்பதற்கும் போதுமானதாக அமையும் எனக் கருதப்படுகின்றது.

அச்சிடப்பட்டுள்ள பெறுபேறுகள்

புத்தகத்தின் அத்தியாயங்கள்

  • Coningham, R.A.E., Manuel, M.J., Davis, C.E. & Gunawardhana, P. (2017). Archaeology and Cosmopolitanism in Early Historic and Medieval Sri Lanka. In Sri Lanka at the Crossroads of History. Biedermann, Z. & Strathern, A. London: UCL Press. 19-43.