இலங்கையின் தென் மாகாணத்தை புராதன காலத்தில் றுஹுணு தேசம் என அழைத்தனர். இங்கு காணப்படுகின்ற தேசிய மரபுரிமை சார்ந்த இடங்கள் பலவற்றுள் மாகம என்னும் பிரதேசம் றுஹுணு தேசத்தின் தலைநகரமாக விளங்கியது. மாகம என்னும் பிரதேசமே தற்காலத்தில் திஸ்ஸமகாராமய என அழைக்கப்படுகின்றது. இந்த திஸ்ஸமகாராம பிரதேசமும் அநுராதபுரத்தைப் போன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புராதன றுஹுணு தேசத்திற்குரிய துறைமுகங்கள் இன்றும் காணப்படுவதுடன், இத்துறைமுகங்களினூடாக பட்டுப் பாதை எனப்படும் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுடனான தொடர்புகள் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளன. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் மாகம என்னும் பிரதேசத்தை மகாநாக மன்னன் ஆண்டதாக மகாவம்ச நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகம என்னும் சமவெளிப் பிரதேசத்துடன் உள்ள சற்று உயரமான பகுதி அக்குருகொட என அழைக்கப்படுகின்றது.

Tissa-stupa

திஸ்ஸமகாராமையில் பிரசித்திபெற்ற மரபுரிமை சார்ந்த இடங்கள்

திஸ்ஸமகாராம தூபி

×

Tissa-stupaதிஸ்ஸமகாராம தூபி

மாகம எனப்படும் பிரதேசத்தில் உள்ள திஸ்ஸமகாராம தூபியுடன் இணைந்த விகாரை வரலாற்றுச் சிறப்பு மிக்க பௌத்த தலமாகும். கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் இந்த விகாரையில் 12000 பிக்குகள் வாழ்ந்ததாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகம பிரதேசத்தை ஆண்ட காவந்திஸ்ஸ மன்னன் இந்த விகாரையை நிர்மாணித்ததாகவும், பௌத்த பிக்குகளுக்கான ஆச்சிரமம் அமைக்கப்பட்டதுடன், தூபியை நிர்மாணித்து அதில் புனித தலதா தாதுக்களைப் பிரதிஷ்டை செய்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது. மத்திய கலாசார நிதியத்தினால் இங்கு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேற்கண்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

சந்தகிரி விகாரை

×

Sandagiri-Monastery--2சந்தகிரி விகாரை

திஸ்ஸமகாராம விகாரையிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 300 மீட்டர் தொலைவில் இந்த சந்தகிரி விகாரை அமைந்துள்ளது. றுஹுணு தேசத்திற்குரிய பிரதான விகாரைகளாகிய மெணிக் விகாரை, யட்டால விகாரை, திஸ்ஸமகாராம விகாரை, சந்தகிரி விகாரை ஆகிய நான்கு விகாரைகளும் கிழக்கு - மேற்கு ரேகைகள் என்னும் முறையின் கீழ் பிரதான நான்கு விகாரைகளில் ஒன்றாக சந்தகிரிய விகாரை கணிக்கப்பட்டுள்ளது. மகாநாக மன்னனால் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விகாரை காவந்திஸ்ஸ மன்னனால் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இந்த விகாரை திஸ்ஸமகாராம விகாரைக்கு மிக அண்மையில் அமைந்துள்ள தாதுகோபுரமாகவும் கருதப்படுகின்றது. ஸ்ரீமகா போதி விகாரை போதி விருட்சத்தின் ஒரு பகுதி இங்கு நாட்டப்பட்டுள்ளதாக இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு அமைந்துள்ள தூபியுடன், ஒரு சிலைக்கூடம் மற்றும் கல்வெட்டுக்கள் அடங்கிய கற்றூண் ஒன்றும் அகழ்வுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.