அநுராதபுர ஆட்சியின் வீழ்ச்சியை அடுத்து கி.பி. 1017 – 1070 ஆண்டுக் காலப்பகுதியில் சோழர்கள் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்தனர். முதலாம் விஜயபாகு மன்னன் சோழர்களைத் தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் ரம்பா விகாரையைத் தனது பிரதான தளமாகப் பயன்படுத்தி சேனைகளைத் திரட்டி வந்தான். கி.பி. 1017 ஆம் ஆண்டில் சோழர்களைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினான். மகா பராக்கிரமபாகு மன்னன் பொலன்னறுவையின் மன்னனனாக ஆட்சியை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் தனது குடும்பத்தாருடன் இந்த ரம்பா விகாரையில் தங்கியிருந்ததாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகாரைத் தூபியிலும் புனித தாதுக்கள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பௌத்த பிக்குகள் இங்கு வந்து தியானத்தில் ஈடுபட்டும், பௌத்த வழிபாட்டுக் கிரியைகளில் ஈடுபட்டும் வந்துள்ளனர்.

மத்திய கலாசார நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து 12 ஆம் நூற்றாண்டின் பின்னர் இப்பிரதேசத்தில் பெருமளவு வர்த்தக நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளதற்கான பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வளவை கங்கையின் கரையோரப் பகுதியில் இப்பிரதேசம் அமைந்திருக்கும் காரணத்தினால் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வசதியாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அநுராதபுர காலகட்டத்திற்கு உரிய பெருமளவு சான்றுகள் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூலம் பெறப்பட்டுள்ளது.

Ramba-Vihara-218

The Most Attractive Places in Ramba Monastery

Maha Nagakula

Ancient international harbour

Buddha image