நோக்கு

நாட்டிற்கு அளப்பரிய சேவைகளையும், நற்பலன்களையும் வழங்குகின்ற இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்கின்ற சிறந்த பொக்கிஷமாக இந்த நிறுவனம் விளங்குகின்றது.

செயற்பணி

கலாச்சார மரபுரிமைகளின் சமூக, சமய, கல்வி மற்றும் பொருளாதார பலன்களை நேரடியாகவும்,  முழுமையாகவும் மக்கள்  பெற்றுக் கொள்வதற்கான முறையிலும், அவற்றை எதிர்காலச் சந்ததியினருக்கு தொடர்ந்து வழங்குவதற்கான முறையிலும் கலாச்சார மரபுரிமைகளின் ஆய்வுகள், பேணிப் பாதுகாத்தல்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பனவற்றின் ஊக்குவிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மூன்று தசாப்த கால சேவையைப் பூர்த்தி செய்துள்ள மத்திய கலாசார நிதியம் இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாத்து அளப்பரிய சேவைகளை நிறைவேற்றியுள்ளது. இந்த நிதியமானது,நாட்டின் ஆரம்ப கால, மத்திய கால கட்டங்களில் இருந்த இராச்சியங்களின் வரலாறுகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதுடன், அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. அபயகிரி, ஜேத்தவன ஆகிய விசேட தூபிகள், விகாரைகள், ஆச்சிரமங்கள் ஆகியவையும், பொலன்னறுவையில் மத்திய காலகட்டத்திற்குரிய செங்கற் கட்டிடங்கள், நகரச் சுற்று மதில்கள், சீகிரியாவின் அரச மாளிகை மற்றும் பூங்கா, தம்புள்ளை சுவரோவியக் குகைகள், கண்டி தலதா மாளிகை, அதனோடிணைந்த தேவாலயங்கள் போன்ற யாவும் மத்திய கலாசார நிதியத்தினதும்,யுனெஸ்கோ நிறுவனத்தினதும், இலங்கையினதும் கலாச்சார முக்கோணத் திட்டத்தின் கீழ் பேணிப் பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சின்னங்களாகும்.

1980 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் மத்திய கலாசார நிதியம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு நிறுவப்பட்டது.

உள்நாட்டு, வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரம் மத்திய கலாசார நிதியத்திற்கு உள்ளது. அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் நிதி கலாச்சார உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அவற்றின் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மத்திய கலாசார நிதியமானது, யுனெஸ்கோ இலங்கை கலாச்சார முக்கோணத் திட்டத்தின் முன்னோடியாக விளங்கியதுடன், 1980-1997 ஆம் ஆண்டுகளில் அதனைச் செயற்படுத்தியது. இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மிகப் பெரிய தேசிய மரபுரிமைகள் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகளாக குறித்த திட்டங்கள் கருதப்பட்டதுடன்,வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களாகவும் கருதப்படுகின்றன. இதன் நிர்வாகப் பணிக்குழுவில் பிரதமர் இதன் தவிசாளராக விளங்குவதுடன், இரண்டு அமைச்சர்கள் உட்பட 12 பேர் இதில் உள்ளடங்குகின்றனர்.

அண்மையில் மத்திய கலாசார நிதியம் நாட்டின் கலாச்சார மரபுரிமைகளின் முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கியமான நிறுவனமாகத் திகழ்ந்தது.அந்நிறுவனத்தின் பணிக்கடன்களாகிய தொல்பொருளியல் சான்றுகளின் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகள் முக்கியமானதாகக் கருதப்படுவதுடன், நினைவுச் சின்னங்கள், பழைமை வாய்ந்த சுவரோவியங்கள், வேறு அலங்கார வேலைப்பாடுகள் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்துகுறித்த மரபுரிமைத் தகவல்களை மக்களுக்கு வழங்குதல், சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை வழங்குதல் போன்ற சேவைகளை ஆற்றி வருகின்றது.  ஆரம்பத்தில் ஆறு கருத்திட்டங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மத்திய கலாசார நிதியமானது,தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 30 கருத்திட்டங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி உள்ளது. மேலும் புதிதாக தக்ஷிண கலாச்சார ஊக்குவிப்பு வலயம் மற்றும் வடமேல் கலாச்சார வலயம் ஆகியகருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தில் நிறுவனத்தின் நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்கும் வகையில் வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும், பதுளை மாவட்டத்திலும் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.  தேசிய மாதிரி உருவமைப்பு நிலையம் ஒரு கல்வி நிறுவனமாக இயங்குவதுடன்,சிறந்த தரத்திலான மாதிரி உருவமைப்புக்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. மத்திய கலாசார நிதியத்தின் அச்சகம் மூலம் பெருமளவான வெளியீடுகள் தயாரிக்கப்படுவதுடன், தனியார் வெளியீடுகள் அச்சிடப்படுவதற்கான ஆர்டர்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

நிர்வாக சபை

  • கௌரவ பிரதமர் அவர்கள் நிர்வாக சபையின் தலைவராக விளங்குவார்
  • கலாச்சார அலுவல்கள் அமைச்சர்
  • நிதிக் கடமைகளுக்கான அமைச்சர்
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) விடயப் பொறுப்பு அமைச்சர்
  • சுற்றுலாத்துறை விடயப் பொறுப்பு அமைச்சர்
  • இந்து மத அலுவல்கள் விடயப் பொறுப்பு அமைச்சர்
  • கலாச்சார அலுவல்கள் அமைச்சின் பிரதமரின் செயலாளர்
  • கலாச்சார அலுவல்கள் அமைச்சரின் செயலாளர்
  • தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
  • பிரதமரால் நியமிக்கப்படும் வேறு இரண்டு நபர்கள் (ஆங்கிலப் பிரதி பூர்த்தி செய்யப்படவில்லை)