மத்திய கலாசார நிதிய வெளியீடுகள் பிரிவினால் மானிடவியல், மரபுரிமைகள், வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்ற விடயங்கள் தொடர்பான இலங்கை மற்றும் வெளிநாட்டு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட பல்வேறு நூல்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.  இந்த நூல்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதுடன்,இந்நூல்கள் ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் யாவரும் பயன்பெறக் கூடிய வகையிலும் உள்ளன.

இந்த நூல்கள் கொழும்பு 07, அத்தபத்து மாவத்தையில் உள்ள பிரதான புத்தக சாலையிலும், மத்திய கலாசார நிதிய பிராந்திய அலுவலகங்களிலுள்ள புத்தக சாலைகளிலும் பெற்றுக் கொள்ள முடியும்.