மத்திய கலாச்சார நிதியத்தின் வலைத்தளத்திற்கு வரவேற்கிறோம்

பாரம்பரிய இடங்கள்

மத்திய கலாசார நிதியம் - இலங்கை

மத்திய கலாசார நிதியமானது, நாட்டின் அனைத்து தேசிய மரபுரிமைகளையும் நிர்வகித்து வரும் மிக முக்கியமானதொரு நிறுவனமாகும்.தொல்பொருளியல் ஆய்வுகள்,தேசிய மரபுரிமைகள் தொடர்பாகநிர்மாணிக்கப்பட்டுள்ள இடங்கள்,அவற்றின் சாதனங்கள், சுவரோவியங்கள், அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் தேசிய மரபுரிமை சார்ந்த அனைத்து விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகள் போன்ற பல அம்சங்களையும் பேணிப் பராமரிக்கும் முக்கிய பொறுப்பினை மத்திய கலாசார நிதியம் ஏற்று அவற்றை நிறைவேற்றியும் வருகின்றது. இவ்வாறான இடங்களுக்கு வருகை தருவோருக்கு குறித்த இடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குதலும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை  ஏற்படுத்திக் கொடுத்தலும் நிதியத்தின் முக்கிய பொறுப்பாகும். ஆரம்பத்தில் ஆறு கருத்திட்டங்களுடன் ஆரம்பித்த மத்திய கலாசார நிதியம் தற்போது புதிய ஆயிரத்தாண்டில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் வியாபித்துச் சென்று அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளது. இதன் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்ட தட்சிண கலாச்சார ஊக்குவிப்பு வலயம் மற்றும் வடமேல் கலாச்சார வலயம் என்பன குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

navigoatr-ta

tell us your

ticket informations