தேசிய மாதிரி உருவமைப்பு நிலையம்
கொழும்பு – கண்டி பிரதான பாதையில் பஸ்யாலை என்னும் பிரதேசத்திற்கு அண்மையில் மரமுந்திரிகை வர்த்தகத்திற்குப் பிரசித்தி பெற்ற பட்டலீய என்னுமிடத்தில் இயற்கை அழகு மிகுந்த கிராமத்தில் இந்த தேசிய மாதிரி உருவமைப்பு நிலையம் அமைந்துள்ளது.
கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய கலாசார நிதியத்தினால் இந்த நிலையம் நிர்வகிக்கப்படுகின்றது. புராதனமான, மிகவும் பழைமை வாய்ந்த சிலைகள், சிற்பங்கள், செதுக்கு வேலைப்பாடுகள், ஓவியங்கள் என்பவற்றின் மாதிரிகளைத் தயாரித்து வழங்குவதே இந்த நிலையத்தின் முக்கிய நோக்கமாகும். அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த நிலையத்தில் தயாரிக்கப்படும் மாதிரி உருவமைப்புக்கள் தரத்திற் சிறந்தவையாகவும், பெறுமதி மிக்கதாகவும் உள்ளதென உறுதிப்படுத்தப்படுகின்றது.
நோக்கங்கள்
உற்பத்திப் பிரிவு
தேசிய மாதிரி உருவமைப்பு நிலையத்தின் உற்பத்திப் பிரிவில் தயாரிக்கப்படுகின்ற மாதிரி உருவமைப்புக்கள் தரத்திற் சிறந்தவையாகக் காணப்படுவதுடன், சீமெந்து, வைபர் கிளாஸ், களிமண், பித்தளை, வெண்கலம், பீங்கான் களிமண், மரம், கல் என்னும் மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த உற்பத்திப் பிரிவில் புராதன பொருட்களின் மாதிரி உருவங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாபகச் சின்னங்கள், சிலைகள் என்பவற்றைத் தயாரித்து வழங்குவதற்கான ஆர்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
தேசிய மாதிரி உருவமைப்பு நிலையத்தில் கடமையாற்றும் விசேட பயிற்சி பெற்ற கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட மாதிரிகள்:
பாரம்பரிய உற்பத்திப் பிரிவு
திறமையுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஓவியந் தீட்டுதல், சிலை செதுக்குதல், சிற்பங்கள் தயாரித்தல் போன்ற துறைகளில் பயிற்சிகளை வழங்குவதுடன்,மூலமான சிற்பங்களின் அல்லது ஓவியங்களின் தோற்றமும், தரமும் பிசகாதவாறு மாதிரி உருவமைப்புக்களைத் தயாரிப்பதற்கான சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுதல் வேண்டும். இந்த உற்பத்திப் பிரிவின் மூலம் பயிற்சிகளைப் பெற்று சிறந்த தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் இளைஞர்கள் தமது வருவாயை ஈட்டிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் கையாள்வதற்கு அவர்களை ஊக்குவித்தல் வேண்டும். ஓவியந் தீட்டுதல், சிலை செதுக்குதல், சிற்பங்கள் தயாரித்தல், பித்தளைப் பொருட்கள், மரப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், கல்லாலான பொருட்கள் என்பவற்றைத் தயாரித்தல் போன்ற கைத்தொழிற் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பயிற்சி நெறிக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இவ்வாறான கைத்தொழில்களில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருவோருக்கு முதலிடம் வழங்கப்படுகின்றது. இந்தப் பயிற்சி நெறிக்கான மூலப் பொருட்கள் மத்திய கலாசார நிதியத்தினால் வழங்கப்படுவதுடன்,பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தின் போது விசேட கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்படும். அத்துடன் தேசிய பயிலுநர் தொழில்நுட்ப அதிகார சபையினராலும் இப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
புராதன சின்னங்கள் மாதிரி உருவமைப்பு நிலையத்தின் பழைய மாணவர்கள் கடந்த சில வருடங்களாக தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிகளின் போது சிறந்த படைப்பாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றனர். இந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களே பின்னர் இங்கு ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றனர்.
Replica Purchase
Sales centres that provide the opportunity to purchase National Replica Schools’ replicas:
Bataleeya +94 33 2285230 |
|
|
|
National Museum, Colombo +94 11 2694767 |
|
|
|
Attaputtu Building, 11, Independence Avenue, Colombo 07 +94 11 2679919 |
|
|
|
Muhandiram Mandiraya, (Near Natha Devalaya) Kandy +94 81 2228075 |
|
|
|
Sigiriya Museum, Sigiriya +94 66 2286946 |
|
|
|
Maritime Archaeology Museum, Galle +94 91 3786088 |
|
|
|
Kataragama Museum, Kataragama +94 47 4928195 |
|
|
|
Maritime Archaeology Museum, Galle +94 91 3786088 |
|
|
|
Tissamaharamaya +94 47 2239082 |
|
|
|
Polonnaruwa Museum, Polonnaruwa +94 27 2224850 |
|
|
|
Jethavana Museum, Anuradhapura +94 25 4926462 |