2021 உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுகிறோம்
குடியரசுத் தலைவரின் உலக சுற்றுலா தினச் செய்தி
வரலாற்று, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மதிப்புமிக்க நாடான இலங்கை பழங்காலத்திலிருந்தே சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது.
பல்வேறு சுற்றுலா சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் சுற்றுலாத்துறை; கோவிட்-19 தொற்றுநோயின் பரவலுடன் செயலற்ற நிலையில் இருந்தது.
எவ்வாறாயினும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகரித்து வரும் பயண அனுமதிகளுடன், இலங்கை மீதான சுற்றுலாப் பயணிகளின் கவனம் உயர்ந்துள்ளது.
எனவே, அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின்படி இலங்கையில் சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவது சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஆறுதலாக அமையும்.
இன்று உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கையின் அழகை ரசிக்க மற்றும் ஒரு ஆத்மார்த்தமான பயணத்தை மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.