அம்பாறை
per person
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை அல்லது திகாமடுல்ல என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு மத்திய கற்கால கட்டத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதுடன், இந்த சூழலில் அமைந்திருக்கும் கற்குகைகள் இயற்கையாகவே அமையப் பெற்றவையாகும். அநுராதபுர இராச்சியம் பலமிழந்து காணப்பட்ட காலகட்டத்தில் ரோஹண இராச்சியத்தின் கீழ் இயங்கி வந்த திகாமடுல்ல பிரதேசம், வரலாற்றுக் காலகட்டங்களில் அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது, அன்றைய ஆட்சியாளர்களுக்கு மிகவும் உறுதுணையாக விளங்கிய பிரதேசமாகவும் அம்பாறை மாவட்டம் விளங்கியது. இலங்கையில் பௌத்த மதம் தழைத்தோங்கிய காலகட்டத்திலேயே திகாமடுல்ல பிரதேசத்திலும் பௌத்த விகாரைகள், ஆச்சிரமங்கள் நிர்மாணித்திருந்தமை தொடர்பான தகவல்கள் வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. இந்த விகாரைகள் பெரும்பாலும் மலை சார்ந்த மற்றும் கடல் சார்ந்த பிரதேசங்களிலும் சமவெளிகளிலும் அமைந்திருந்தன. தற்காலத்தில் இப்பிரதேசத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழும் முக்கிய பிரதேசமாக அமைந்துள்ளது.
மத்திய கலாசார நிதியத்தினால் 2017 ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தினுள் அமைந்திருக்கும் மரபுரிமை இடங்கள் தொடர்பான முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், அங்கு யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்ட விகாரைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு, அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் அவற்றை மக்கள் தரிசிப்பதற்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்பதே இந்த கருத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகவும் உள்ளன.