அனுராதபுரம்
per person
பண்டைய உலகத்தைச் சேர்ந்த மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் புனிதமான நகரங்களில் ஒன்றான அனுராதபுரம் இலங்கையின் முதல் தலைநகரம் ஆகும். UNESCO உலக பாரம்பரிய தளங்களை வழங்கும் இந்த நகரம் அதன் பிரம்மாண்ட வரலாறு மற்றும் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பௌத்த நினைவுச்சின்னங்களின் பரந்த வரிசை காரணமாக பௌத்தம் மற்றும் அதன் மக்களின் மையமாக உள்ளது. ஜேதவனய மற்றும் அபயகிரிய என்ற உலகின் மிகப்பெரிய செங்கல் நினைவுச்சின்னங்கள் அங்கு அமைந்துள்ளன. 3 ஆம் நூற்றாண்டில் நடப்பட்ட மகாவிஹாரயத்தின் புனித போதி மர சன்னதி ஸ்ரீ மஹாபோதி.
அனுராதபுரத்தில் மிகவும் கவர்ச்சிகரமான இடங்கள்
மகா விகாரை
தேவநம்பியதீச மன்னன் (கி.மு. 250 – 210) அநுராதபுரத்தில் தென்திசை நுழைவாயிலின் அருகில் அமைந்துள்ள நந்தன வனம் மற்றும் மகாமேக வனம் முதலானவற்றை பிக்கு சங்கத்தினருக்காக அர்ப்பணம் செய்யதான். பின்னர் மகாமேகவனத்தில் முதன்முதலாக ஒரு பிக்கு ஆச்சிரமத்தையும் கட்டுவித்தான். ஆரம்பத்தில் இந்த ஆச்சிரமம் திஸ்ஸாராம என அழைக்கப்பட்டது. பின்னர் அப்பெயர் மருவி மகாமேகவனாராமய, மகாவிகாரை என மாற்றம் பெற்றது. மகா விகாரை எனப்படும் இந்த ஆச்சிரமம் அன்று தொடக்கம் பல நூற்றாண்டு காலமாக இலங்கை வாழ் பிக்குகளின் பிரதான ஆச்சிரமமாக விளங்கியது. முதன்முதலாக தேரவாத திரிபிடக நூலை ஒரு பிரபந்தமாகத் தயாரித்தமை, சவிஸ்தர அட்ட கதா என்னும் நூல் இயற்றியமை போன்ற விடயங்கள் இந்த ஆச்சிரமத்தில் வாழ்ந்த பிக்குகளின் நிர்மாணிப்புக்கள் ஆகும். அன்றைய காலகட்டத்தில் மகா விகாரை ஆச்சிரமத்தின் செயற்பாடுகள் இலங்கையின் சமய சம்பிரதாயங்கள், சமூக சம்பிரதாயங்கள், கலாச்சாரப் பண்பாடுகள், அரசியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பிரதேசத்தின் சூழலில் ஸ்ரீமகாபோதி, ருவான்வெலிசேய, தூபாராம போன்ற பிரதானமான ஆச்சிரமங்கள் உருவாகியமையும் குறிப்பிடத்தக்கது.
மகா விகாரையின் மிகவும் விரும்பத்தக்க இடங்கள்
அபயகிரிய
இலங்கையிலுள்ள மிக விசாலமான விகாரைகளில் இரண்டாம் இடத்திலுள்ளதாகக் கருதப்படுகின்ற தூபியாக அபயகிரித் தூபி விளங்குகின்றது. வட்டகாமினி அபய அல்லது வலகம்பா (கி.மு. 89-77) என அழைக்கப்படும் மன்னன் இந்த விகாரையை நிர்மாணித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. சுமார் 200 ஹெக்டெயார் நிலப்பரப்பில் இந்த விகாரை அமைந்துள்ளது. மகா விகாரையில் மூவாயிரம் பிக்குகள் தங்கியிருந்ததாகவும், அபயகிரி விகாரையில் ஐயாயிரம் பிக்குகள் தங்கியிருந்ததாகவும், ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த பாஹியன் தேரர் அவர்கள் கூறியுள்ளார்.
மகாசேன மன்னனது ஆட்சிக் காலத்தில், அபயகிரி விகாரையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உச்சக் கட்டத்தினை அடைந்திருந்ததுடன், மகாயான பௌத்த தர்ம சம்பிரதாயங்களின் முக்கிய கேந்திர நிலையமாகவும் அபயகிரி விளங்கியது. அபயகிரி விகாரைத் தொகுதியிலுள்ள கட்டிடங்கள் உள்நாட்டு தேவைகளுக்காக மாத்திரமன்றி, சர்வதேச ரீதியாகவும் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
அபயகிரியின் மிகவும் விரும்பத்தக்க இடங்கள்
ஜேத்தவனாராம
மகாசேன என்னும் மன்னன் (கி.பி. 276-303) இந்த ஜேத்தவனாராமய என்னும் விகாரையைக் கட்டுவித்தான். மகாசேன மன்னன் மகாயான பௌத்த தர்மத்தைப் பின்பற்றியவராவார். ஜேத்தவனாராமய விகாரையில் அமைந்துள்ள மிக விசாலமான தூபிகள் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. இந்த விகாரை அமைந்திருக்கும் பிரதேசம் ஆரம்ப காலத்தில் நந்தன வனத்திற்கு உரித்தானதாக இருந்ததாக வரலாறுகளில் கூறப்படுகின்றன. அங்கு மகிந்த தேரர் அவர்கள் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் தர்ம போதனை செய்ததாகக் கூறப்படுகின்றது. சங்காராம ஆச்சிரமங்களுக்கு உரித்தான சகல அம்சங்களும் பொருந்திய கட்டிடமாக அமைந்துள்ள இதன் நிர்மாணப் பணிகள், மகாசேன மன்னனின் ஆட்சிக் காலத்தில் மாத்திரமன்றி, கித்சிரிமெவன் மன்னன் (கி.பி. 303-331) ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னர் ஆட்சி செய்த மன்னர்கள் காலத்திலும் இடம் பெற்றுள்ளன.
ஜேத்தவனாராமயின் மிகவும் விரும்பத்தக்க இடங்கள்
குறுகிய தகவல்
மாகாணம் | வட மத்திய மாகாணம் |
|
|
மாவட்டம் | அனுராதபுரம் |
|
|
காவல் நிலையம் | மாடிக்கு |
|
|
மருத்துவமனை | அனுராதபுரம் |
|
|
தொடர்பு எண் | +94 252 222 351 (அபயகிரி) +94 252 055 121 (மகா விகாரை) +94 252 224 718 (ஜேதவநாராமாய) |