தம்பதெனிய
per person
புராதன இலங்கையின் மூன்றாவது தலைநகரமாக விளங்கிய தம்பதெனியா நகரத்தில் 13 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் விஜயபாகு மன்னனால் புனிதத் தாதுக்களைப் புனித பேழையில் வைத்து தூபியொன்றை நிர்மாணித்ததாகவும், இதன் காரணமாக இப்பிரதேசம் பிரபல்யம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், இங்குள்ள குன்றின் மீது ஒரு கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருந்ததாகவும், அதனுடன் இணைந்த நீர் அகழி, பாதுகாப்பு அரண்கள், அரச பூங்கா என்பன அமைந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. விஜயபாகு மன்னனுக்குப் பிறகு இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் 2070 வருடங்கள் இப்பிரதேசத்தை ஆட்சி புரிந்ததாகவும், இந்த மன்னன் சிறந்த கவிஞனாக, ஒரு பண்டிதராக, சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தமையால் தம்பதெனியா நகரம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றதாகக் கூறப்படுகின்றது. அதன் பின்னர் நான்காம் விஜயபாகு மன்னன் (1270-1272) மற்றும் முதலாம் புவனேகபாகு மன்னன் (1272-1284) ஆகியோர் ஆட்சி புரிந்தனர். புவனேகபாகு மன்னன் தம்பதெனியாவுக்குப் பின்னர் யாப்பஹுவ பிரதேசத்தை தலைநகராக்கிக் கொண்டான்.
குறுகிய தகவல்
மாகாணம் | வடமேல் மாகாணம் |
|
|
மாவட்டம் | குருநாகல் |
|
|
காவல் நிலையம் | கிரியுல்லா |
|
|
மருத்துவமனை | தம்பதெனிய |
|
|
தொடர்பு எண் | +94 372 266 272 |