மாத்தறை
per person
இலங்கையின் தெற்குக் கரையோரப் பிரதேசமாகிய மாத்தறை மாவட்டம், மரபுரிமைகள் நிறைந்ததும், ஆரம்ப வரலாற்றுக் காலகட்டம் முதல் வாழ்ந்த மனிதர்களின் சான்றுகள் நிறைந்ததுமான பிரதேசமாகக் கருதப்படுகின்றது. அந்நியர் ஆட்சிக் காலகட்டத்தின் போது இந்த மாவட்டம் மிக முக்கியமான பிரதேசமாக அமைந்திருந்ததாக வரலாற்றுத் தகவல்களில் கூறப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் போர்த்துக்கேயர் கோட்டையை நிறுவி மாத்தறை மாவட்டத்தை தமது நிர்வாகப் பிரதேசமாக அமைத்திருந்தார்கள். பின்னர் 1645 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் ஆட்சியைக் கைப்பற்றி, அவர்களும் தமது கோட்டையை அமைத்தார்கள். இவ்வாறான காலகட்டத்தில் இப்பிரதேசத்தில் கறுவா வர்த்தகம், யானைகள் விற்பனை செய்தல் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன. இறுதியில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தின் போது இப்பிரதேசத்தில் மேற்கத்திய கலாச்சாரம் மேலோங்கியது. இதன் காரணமாக கிறிஸ்தவ தேவாலயங்கள், கோட்டைகள், கட்டிடங்கள் என்பனவும் மேற்கத்திய முறைப்படி உருவாகின. அன்றைய வரலாற்றுச் சின்னங்களாக இருந்த அவ்வாறான கட்டிடங்கள் தற்போதும் எஞ்சியுள்ளன. எவ்வாறாயினும், 19 ஆம் நூற்றாண்டில் உருவாகிய பௌத்த விகாரைகள், ஆச்சிரமங்கள் போன்றவற்றில் தென் மாகாணத்திற்கே உரித்தான சித்திரக் கலைகள் அடங்கிய சுவரோவியங்கள் காணப்படுகின்றன.
‘றுஹுணு உரும கவய’ என்னும் கருத்திட்டத்தின் கீழ் மத்திய கலாசார நிதியத்தினால், 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டன. இச் செயற்றிட்டத்தின் கீழ் கட்டிடக் கலையம்சங்கள், சுவரோவியங்கள் என்பன பேணிப் பாதுகாக்கப்பட்டன.