பண்டுவஸ்நுவர
per person
மத்திய கலாசார நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட வடமேல் சதுக்கம் என்னும் திட்டத்தின் கீழ் பண்டுவஸ்நுவர பிரதேசம் மிகவும் முக்கியமான பகுதியாக அமைந்துள்ளது. மகா பராக்கிரமபாகு மன்னன் பொலன்னறுவையின் ஆட்சியாளராகக் கடமையாற்றிய போது முழு இலங்கை நாட்டினதும் ஆட்சியாளராவதற்குத் தயாராகிய சந்தர்ப்பத்தில் தென்னிலங்கையின் பிராந்திய ஆட்சியாளராக மாறியதன் காரணமாக அங்கு தனது தலைநகரத்தை அமைத்துக் கொண்டுள்ளான். எனினும் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டிருந்த வாவிகளை விசாலித்து விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு பொலன்னறுவையை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டதுடன்,’பராக்கிரமபுர’ என்னும் ஒரு அரண்மனையை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டான். இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுப் பாகங்கள் பொலன்னறுவை மாளிகைச் சின்னங்கள் போன்று இருந்த போதும் அளவிற் சிறியனவாக உள்ளன.