இரத்தினபுரி
per person
இலங்கையின் ஈரவலயப் பிரதேசத்தினுள் அமைந்திருக்கும் இரத்தினபுரி மாவட்டம், மரபுரிமைகள் நிறைந்ததும், ஆரம்ப வரலாற்றுக் காலகட்டம் முதல் வாழ்ந்த மனிதர்களின் சான்றுகள் நிறைந்ததுமான பிரதேசமாகக் கருதப்படுகின்றது. இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஆரம்ப வரலாற்றுக் காலகட்டமாகிய பிளைஸ்டோசீன் எனப்படும் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. பெல்லன்பெந்தி பெலெஸ்ஸ, குருவிட்ட, பெல்மதுளை, கலவான ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளியல் ஆய்வுகளின் போது பிளைஸ்டோசீன் காலகட்டத்து மானிடர்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் இற்றைக்கு 60,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மிருக இனங்கள் தொடர்பாகவும், மிகவும் பிரபல்யம் வாய்ந்த பலாங்கொடை மானிடன் எனக் குறிப்பிடப்படுகின்ற இற்றைக்கு 37,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆதி மனிதன் தொடர்பாகவும் பல தொல்பொருளியல் சான்றுகள் இப்பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஈரவலயப் பிரதேசமாகவும், மலைப்பாங்கான பிரதேசமாகவும் அமைந்துள்ள இப்பிரதேசத்தினுள் ஏராளமான பௌத்த விகாரைகள், ஆச்சிரமங்கள் என்பனவும் காணப்படுகின்றன.
2016 ஆம் ஆண்டில் மத்திய கலாசார நிதியத்தினால் இப்பிரதேசத்தில் காணப்படும் மரபுரிமை சார்ந்த இடங்கள் தொடர்பாக முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்தின் மரபுரிமைகள், அவை சார்ந்த பிரதேசங்கள் என்பவற்றின் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல்கள், அவர்களுக்கான வசதிகள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறுகிய தகவல்
மாகாணம் | சப்ரகமுவ மாகாணம் |
|
|
மாவட்டம் | இரத்தினபுரி |
|
|
காவல் நிலையம் | இரத்தினபுரி |
|
|
மருத்துவமனை | இரத்தினபுரி |
|
|
தொடர்பு எண் | +94 452 262 777 |